கர்ப்பிணிப் பெண்ணை தாக்கி வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய கணவன் மற்றும் மாமியார் மீத புகார்!!
சென்னை காசிமேடு சி.ஜி காலணியை சேர்ந்தவர் திவ்யா(31) இவரது கணவன் திலீப் (32) இவர் திருவொற்றியூரில் உள்ள தனியார் டயர் தொழிற்சாலையில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வருகிறார்
திவ்யா மற்றும் திலீப் திருமணம் கடந்த 05 -09 -2022 அன்று பெற்றோர்கள் சம்மதத்துடன் கோவிலில் திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றதாக கூறப்படுகிறது. இருவரும் சி.ஜி காலனி அதே தெருவில் மாமியார் மஞ்சுளா மாமனார் அன்பரசு மற்றும் கணவன் திலீப் ஆகியோர் கூட்டு குடும்பமாக வசித்து வந்தனர்
இந்நிலையில் பெண்ணுக்கு திருமணம் நடக்கும் போது பெண்ணின் தாய் ரேணுகா தேவி பத்து சவரன் நகை போடுவதாக கூறி ஏழு சவரன் மட்டுமே போட்டதாகவும் மீத உள்ள நகையை கொண்டு வரும்படி தினமும் கொடுமைப்படுத்தியதாகவும் அதேபோன்று மணமகன் திலீப் தினமும் மனைவி திவ்யாவை கண்முன் தெரியாமல் தாக்குவது வழக்கம் என்றும்
இதே போன்று கடந்த 29 ம் தேதி இட்லி சாப்பிடும் பிரச்சனையில் மனைவியை பலமாக தாக்கி கழுத்தை நெறித்தும் கை மற்றும் கால் உள்ளிட்ட பகுதிகளில் தாக்கிய நிலையில் அக்கம் பக்கத்தினர் திவ்யாவை ராயபுரம் அரசு ஆர்எஸ்ஆர்எம் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில்
அங்கு பணியில் இருந்த மருத்துவர்கள் மருத்துவமனை புற காவல் நிலையத்தில் புகார் அளித்ததில் பேரில் பெண் காவலர்கள் வழக்கு பதிவு செய்து திவ்யாவின் தாயாரிடம் வந்து விசாரித்து மட்டும் சென்று விட்ட நிலையில் இதுகுறித்து திவ்யாவின் தாயார் மஞ்சுளா தன் மகளை வரதட்சணை கேட்டு கொடுமை படுத்துவதாகவும் கணவன் தன் மகளை தாக்குவது குறித்தும் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் காவல்துறையினர் புகாரை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் சம்பந்தப்பட்டவரை அழைத்து விசாரிக்கவில்லை என்பதால்
இதனை கண்டு கொள்ளாத காவல் ஆய்வாளர் மீதும் மற்றும் வரதட்சணை கேட்டு கணவன் மற்றும் மாமியார் உள்ளிட்டோர் மீதும் தன் மகள் உயிருக்கு ஆபத்து என்ற நோக்கில் தண்டையார்பேட்டையில் உள்ள வடக்கு மண்டல காவல் இணை ஆணையர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவரின் தாய் மற்றும் உறவினர்கள் ஒன்றிணைந்து புகார் அளித்துள்ளனர்
காவல்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து கணவன் திலிப்பை கைது செய்ய வேண்டும் தனது மகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் உறவினர்கள் கோரிக்கை வைத்தனர்