தனது கதாபாத்திரத்தை தல அஜித்துக்கு சமர்ப்பித்த வில்லன்!! நெகிழ்ச்சியூட்டும் சம்பவம்!!
தமிழ் சினிமாவில் 5௦ குக்கு மேல் படங்களை நடித்து ரசிகர்களால் சாக்கோ பாய் என்று அழைக்கப்படும் நடிகர் ஆரியா. இவர் சமிபத்தில் கஜினிகாந்த், காப்பான் மற்றும் டெடி திரைப்படத்தில் நடித்து ரசிகர்களின் மனதை வென்றார். இதைத் தொடர்ந்து நடிகர் ஆரியா தற்போது இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் சார்பட்டா பரம்பரை எனும் படத்தில் நடித்துள்ளார். அப்படம் தற்போது ஓடிடியில் வெளிகி உள்ளது. ஆர்யாவின் 30 வது படமாக சார்பட்டா பரம்பரை படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்திற்காக ஆர்யா பல்வேறு கடுமையான உடற்பயிற்சிகள் மற்றும் பாக்சிங் கற்றுக்கொண்டு நடித்ததாக தெரிவித்துள்ளனர். இந்தப்படத்தில் வடசென்னை வாலிபர் மற்றும் பாஸ்கராக நடித்துள்ளார் என படக்குழுவினர் கூறியுள்ளனர்.
மேலும் சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகியிருந்தது. கொரோனா தொற்று காரணமாக தொடர்ந்து வெளியாகும் படங்கள் அனைத்தும் ஓடிடி தளத்தில் தான் வெளியாகி வரும் நிலையில், இந்த திரைப்படமும் அமேசான் தளத்தில் இன்று வெளியாகியுள்ளது.
மேலும் இப்படத்தின் வில்லனான வெம்புலி கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் ஜான் கொக்கென் தனது ட்விட்டர் பக்கத்தில் அஜித் குறித்த ஒரு செய்தியை வெளியிட்டு இருந்தார். தற்போது அந்த செய்தி வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. அந்த செய்தி என்னவென்றால் எப்போதும் என்னை ஊக்கப்படுத்தியதற்கு நன்றி அஜித் சார். ஒவ்வொரு நாளும் கடினமாக உழைக்கவும், சிறந்த மனிதராக மாற்ற நீங்கள் என்னை ஊக்குவித்து இருக்கிறீர்கள். இந்த வெம்புலி கதாபாத்திரத்தை உங்களுக்கு அர்பணிக்கின்றேன் சார். லவ் யூ சார் என்று பதிவிட்டிருந்தார். தற்போது இந்த பதிவு அஜித் ரசிகர்களால் இணையதளத்தில் பகிரப்பட்டு வருகிறது.