புதுவகை யுத்தியால் முதியவருக்கு விரித்த வலை! அந்த வினையினால் ஏற்பட்ட பரிதாபம்!
மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தில், முதியவர் ஒருவர் தனது வங்கி கணக்கில் இருந்து இருபத்தி ஒன்பது லட்சம் ரூபாய் சேமித்து வைத்துள்ளார். இந்நிலையில் அவருக்கு கடந்த 10 மற்றும் 12ஆம் தேதி வங்கியிலிருந்து அழைப்பதாக ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர்கள் தாங்கள் உங்கள் வங்கி கணக்கில் கேஒய்சி தகவல்களை இணைக்கவில்லை.
ஆகையால் உங்களது வங்கி கணக்கு தற்போது முடக்கப்பட்டுள்ளது என்று அவரிடம் நம்பும்படி கூறியுள்ளனர். மேலும் வங்கி கணக்கு செயல்பாட்டிற்கு வர வேண்டுமானால் உங்களது வங்கி கணக்கு எண், டெபிட் கார்டின் எண், வாடிக்கையாளர் எண், பான் கார்டு எண் மற்றும் செல்போனில் வரும் குறுஞ்செய்தி ஆகியவற்றை சொல்லுமாறு கேட்டுள்ளனர்.
இந்த மோசடி கும்பல் தனது வங்கி கணக்கில் உள்ள பணத்தை அபகரிப்பதற்காக இப்படி ஒரு திட்டத்தை தீட்டி உள்ளனர் என்பதை அறியாத அந்த 80 வயது முதியவரும் அவர்கள் கேட்ட அனைத்து தகவல்களையும் அவர்களிடம் பகிர்ந்துள்ளார். அந்த தகவல்களை பெற்ற மோசடி கும்பல் முதியவரின் வங்கி கணக்கில் இருந்த மொத்த சேமிப்பு பணமான 29 லட்சத்து 8 ஆயிரம் ரூபாயையும் எடுத்து விட்டனர்.
அதன் பிறகு அவர்கள் பணத்தை எடுத்ததை உணர்ந்துள்ளார். அவர் சற்றும் சுதாரிக்காமல் இது குறித்து போலீஸாரிடம் புகார் அளித்துள்ளார். இதனை பதிவு செய்து கொண்ட போலீசார் அந்த ஆன்லைன் மோசடி கும்பல் மூலம் முதியவர் இழந்த தொகையை மோசடி செய்து கைப்பற்றியது யார்? என்பது குறித்த விசாரணையை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
வங்கிகள் எவ்வளவு முறை நாங்கள் யாரும் உங்களது சுய விவரங்களை கேட்க மாட்டோம் என அறிவுரை கூறினாலும், இப்படி சில பேர் மோசடி கும்பலிடம் சிக்கி பணத்தை இழந்து விடுகின்றனர். நம் பணத்தை பாதுகாக்க நாம் தான் உஷாராக இருக்க வேண்டும். சின்ன தவறினால் நமது ஒட்டு மொத்த சேமிப்பையும் இழக்கிறோம் என்று நமக்கு முதலில் புரிய வேண்டும்.