லிவ் இன் டுகெதர் வாழ்க்கை வாழ்ந்து வந்த கணவனை கையும் களவுமாக பிடித்த மனைவி! புதுப்பேட்டையில் பரபரப்பு!

0
93
The wife caught her husband who was living a live-in-together life! Busy in Pudupettai!
The wife caught her husband who was living a live-in-together life! Busy in Pudupettai!

கடலூர் மாவட்டத்தை சேர்ந்த கலைச்செல்வி என்ற பெண்ணுக்கும், லோகராஜ் என்னும் நபருக்கும் 10 வருடங்களுக்கு முன்னர் காதல் திருமணம் நடந்துள்ளது. அந்த நேரத்தில் வரதட்சணையாக 43 சவரன் நகை மற்றும் 2 லட்சம் ரூபாய் ரொக்கமாக பணம், பீரோ, கட்டில் மெத்தை போன்ற பொருட்கள் சீதனமாக வழங்கப்பட்டுள்ளது. இந்த தம்பதிக்கு 9 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வரதட்சணை கேட்டு கலைச்செல்வியை லோகராஜ் கொடுமை படுத்தியுள்ளார். இதனால் கணவரை பிரிந்து கலைச்செல்வி தனிமையில் வாழ்கிறார். இது சம்மந்தமான விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. ஜீவனாம்சம் வேண்டும் என்று கலைச்செல்வி வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்நிலையில் லோகராஜுக்கு ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு புதுப்பேட்டையில் தனியாக வீடு எடுத்து வாழ்ந்துவந்துள்ளார். இந்த சம்பவத்தை பற்றி அறிந்த கலைச்செல்வி புதுப்பேட்டையில் உள்ள லோகராஜின் வீட்டுக்கு சென்று லோகராஜூவும், அவருடைய தொடர்பில் இருந்த பெண்ணும் இருந்த வீட்டை வெளியில் இருந்து பூட்டி பொதுமக்கள் மற்றும் போலீசாரை அழைத்து கூச்சல் போட்டுள்ளார்.

காதலியுடன் வீட்டில் தனிமையாக இருக்கும் நேரத்தில் மனைவி வந்து வீட்டை பூட்டியதால் லோகராஜ் என்ன செய்வதென்று தெரியாமல் விழி பிதுங்கி விட்டார். வீட்டை விட்டு வெளியே வந்த கணவரை பளார் என கன்னத்தில் ஒரு அறை விட்டார் கலைச்செல்வி. என்னுடன் விவாகரத்து வாங்காமல் இவர் எப்படி வேறொரு பெண்ணுடன் குடும்பம் நடத்த முடியும் என்று கேட்டு கலைச்செல்வி பிரச்சனை செய்தார். பின்னர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கலைச்செல்வியை சமாதானம் செய்து அந்த இடத்தில இருந்து அனுப்பி வைத்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Previous articleஇஸ்லாமிய வாக்கு கிடைக்காது.. திமுக பக்கம் தாவிய அதிமுக மூத்த தலை!! திக்குமுக்காடும் எடப்பாடி!!
Next articleகள்ளத் தொடர்பால் சிக்கி சீரழிந்த குடும்பம்! மருத்துவமனையில் மனைவியை கத்தியால் குத்திய கணவர்!