பிரபல நடிகை இறந்த பிறகும் லட்சக்கணக்கான கடனை அடைத்த மனைவி!! 

Photo of author

By Parthipan K

நடிகர் முரளி தனது சினிமா பயணத்தை 1982 ஆம் ஆண்டில் இயக்குனர் எரங்கி சர்மா இயக்கிய கன்னட திரைப்படமான ‘கெலுவினா ஹெஜ்ஜே’ மூலம் தொடங்கினார். 

பிரேமா பர்வா, பில்லி குலாபி, அஜேயா, பிரேமா கங்கே, தையகோட்டா தாலி, சம்பவாமி யுகே யுகே, அஜய்-விஜய் ஆகியோர் தமிழ் திரையுலகில் நுழைவதற்கு முன்பு அவர் செய்த கன்னட படங்கள். தமிழ் சினிமாவில் ‘பூவிலங்கு’  என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான முரளி சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நிலை குறைவால் இறந்துவிட்டார். ஆனால் அவர் வாங்கிய கடனை அவருடைய மனைவி ஷோபா தேடி தேடி போய் கடனை அடைத்து வருகிறார்.

இதுகுறித்து பைனான்சியர் திருப்பூர் சுப்பிரமணியன் ஒரு நெகிழ்ச்சியான சம்பவத்தை பதிவிட்டுள்ளார்.

நடிகர் முரளி தன்னிடம் வாங்கிய  கடன் உடைய பாத்திரத்தினை நாகரீகம் கருதி கிழித்து விட்டேன். ஆனால் சில நாட்கள் கழித்து முரளியின் மனைவி அந்த கடன் தொகையை 17 லட்சம் ரூபாயை திரும்ப செலுத்தி என்னை நெகிழச் செய்தார். அது மட்டுமல்லாமல் அவருடைய மகன் அதர்வாவையும் ஆசீர்வாதம் செய்ய சொன்னார்.

நான் உங்களிடம் பணம் கேட்கவே இல்லை என்று சோபாவின் பைனான்சியர் கேட்டபோது, என்னுடைய கணவன் இறந்த பிறகு பலர் என்னிடம் தொலைபேசியில் அழைத்து எப்ப பணம் தருவீர்கள் என்று தொந்தரவு  செய்தார்கள். 

ஆனால் நீங்கள் என்னிடம் அப்படி எந்த ஒரு கேள்வியையும் கேட்காததால் நான் என்னுடைய மனசாட்சிக்கு பயந்து என்னுடைய கணவன் யாருக்கும் கடன் படக் கூடாது என்ற எண்ணத்தில் தான் அவர் பட்ட கடனை ஒவ்வொன்றாக தேடி தேடி போய் அழைத்து வருகிறேன் என்று பதில் அளித்து வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.