உணவு சாப்பிட்ட பெண் கொடுத்த ரிவ்யூ! எச்சரிக்கை விடுத்த சொமேட்டோ!
தற்போது ஆண் பெண் என அனைவரும் பணிக்கு செல்வதால் பெரும்பாலானோர் உணவகங்களில் தான் உணவு உண்கின்றார்கள்.இல்லையெனில் உணவு டெலிவிரி செய்வதற்கென தற்போது எண்ணற்ற செயலிகள் வந்துள்ளது. இருந்த இடத்தில் இருந்தே ஆடர் செய்தால் வீட்டிற்கே உணவை டெலிரி செய்வார்கள்.
இந்நிலையில் பெங்களூரில் வசிக்கும் பெண் ஒருவர் உணவகம் ஒன்றில் சாப்பிட சென்றுள்ளார் அங்கு உணவு சாப்பிட்ட பிறகு அவருக்கு உடல் நல குறைவு ஏற்பட்டுள்ளது.தற்போது எந்த உணவகம் அல்லது செயலி மூலம் உணவு வாங்கினாலும் அவர்களுக்கென ரிவ்யூவ் வழங்குவது என்பது முக்கியமான ஒன்றாக உள்ளது.
பெங்களூரை சேர்ந்த திஷா சங்வி என்ற பெண் அவர் சாப்பிட்ட உணவின் தரத்தை பற்றி மற்றவர்களுக்குத் தெரிவதற்காக சொமேட்டோவின் கமென்ட்ஸ் பிரிவில் அவருடைய அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.சங்வி அவருடைய அனுபவத்தை பகிர்ந்து கொள்ளும்போது கோரமங்களாவில் உள்ள ஒரு ரெஸ்டாரண்டில் சாப்பிட்ட பிறகு உடல் நலக்குறைவை எதிர்கொண்ட நபர் நான் மட்டுமல்ல என்று குறிப்பிட்டிருந்தார்.
மேலும் அதே உணவகத்தில் சாப்பிட்ட மற்றொருவரும் இதே அனுபவத்தை பெற்றதாக அவருடைய ஸ்கிரீன்ஷாட்டை சேர்த்து பதிவிட்டார்.மேலும் அவருடைய ரிவ்யூவை அகற்றுவது குறித்து எச்சரிக்கை செய்யும் வகையில் சொமேட்டோ நிறுவனத்திடம் இருந்து திஷவுக்கு மெயில் வந்துள்ளது.மேலும் சொமேட்டோ தரப்பில் இருந்து சுகாதார மீறலைப் பற்றி புகாரளிப்பதர்கான சரியான தளம் இது அல்ல என்று அந்த மெயிலில் குறிப்பிட்டிருந்தது.
இதனால் நெட்டிசன்கள் பலரும் சொமேட்டோவிற்கு எதிராக குரல் கொடுத்து வந்தனர்.அதே நேரத்தில் சொமேட்டோவில் ஆர்டர் செய்யப்படாத உணவு பற்றி அந்த நிறுவனத்திற்கு ரிவியூ கொடுப்பது தவறுதான் எனவும் சிலர் சொமேட்டோவிற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர் .