பொதுமக்கள் முன்னிலையில் காவலரை சரமாரியாக அறைந்த பெண்!!

Photo of author

By Savitha

பொதுமக்கள் முன்னிலையில் காவலரை சரமாரியாக அறைந்த பெண்!!

சீருடை அணிந்த காவலரை பொதுமக்கள் முன்னிலையில் புரூக்கா அணிந்த பெண் ஒருவர் சரமாரியாக அறைந்த சம்பவம் ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆல்வார் பகுதியில் உள்ள பரபரப்பான மார்கெட் பகுதியில் உள்ள கோபால் திரையரங்கம் பகுதியில் புரூக்கா அணிந்த பெண் ஒருவர் சீருடையில் இருந்த காவலரை சரமாரியாக அறைந்த நிகழ்வு அரங்கேறியுள்ளது.

அப்பெண் யார் என்பதும் எதற்காக காவலரை அறைந்தார் என்பதும் தெரியாத நிலையில் சீருடையில் இருந்த காவலர் மது அருந்தி இருந்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக விசாரித்து வரும் காவல் துறையினர் அந்தக் காவலரின் பெயர் ராகுல் என்றும் சம்பவம் நிகழ்ந்த அன்று அவர் NEB காவல் நிலையத்தில் பணியமர்த்தப்பட்ட போதும் அன்று பணிக்கு வரவில்லை என தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.