Home National ஐஸ்கிரீம் விற்ற ஊரில் போலீஸ் அதிகாரியாக மாறிய பெண்!  

ஐஸ்கிரீம் விற்ற ஊரில் போலீஸ் அதிகாரியாக மாறிய பெண்!  

0
ஐஸ்கிரீம் விற்ற ஊரில் போலீஸ் அதிகாரியாக மாறிய பெண்!  
The woman who became a police officer in the town where ice cream was sold!

ஐஸ்கிரீம் விற்ற ஊரில் போலீஸ் அதிகாரியாக மாறிய பெண்!

காதல் என்றாலே பெரும்பாலும் வீடுகளில் பிரச்சனை தான். சிலர் தற்போது நமது பிள்ளைகள் தானே என ஒப்புக்கொண்டாலும், பலரது வாழ்க்கை காதலில் விழுந்தால் கேள்விக்குறிதான். நம்பி வந்தவர்கள் நல்ல படியாக வைத்து இருந்தால்பரவாயில்லை. ஆனால் அதற்கு மாறாக நம்மை நாடு ரோட்டில் விட்டால் என்ன செய்வது.

காதலிப்பது தவறு இல்லை. ஆனால் நம் நம்பிக்கைக்கு உரியவர்களாக இருக்க வேண்டும். அவ்வாறு இருக்கும் பட்சத்தில், வாழ்கை சொர்க்கம்தான். அப்படி இல்லாமல் நிலைமை தலைகீழ் ஆனால் அதற்கான பலனும் நம்மையே சாரும் என்பது போல இவரது வாழ்க்கையில், இவ்வளவு துன்பங்களா என நினைக்கும் வண்ணம் உள்ளது.

அப்படி பிறரால், கைவிடப்பட்டாலும்,அவர் ஒரு பெண்ணாக இருந்தாலும், அதை தகர்த்தெறிந்து அவரின் விடாமுயற்சியுடன் தன் சொந்த காலில் நின்று அதே இடத்தில், அனைவரும் மதிக்கும் வண்ணம் பெரிய பொறுப்பை வகிப்பது, அனைவருக்கும் வியப்பாக இருக்கிறது.

கேரள மாநிலத்தில் அப்படி ஒரு சம்பவம் நடந்தேறியுள்ளது. திருவனந்தபுரம் மாவட்டத்தில், காஞ்சிராம் குளத்தை பூர்வீகமாகக் கொண்டவர் எஸ்.பி.ஆனி சிவா 31 வயதான இவர்,  தனது கல்லூரி முதலாம் ஆண்டு படிப்பின் போது பெற்றோரின் எதிர்ப்பை மீறி காதலித்து, காதலித்தவரையே  திருமணமும் செய்து கொண்டார்.

இரண்டு வருடங்கள் தன் காதல் கணவருடன் இனிமையான இல்லற வாழ்க்கை நடத்தினார் ஆனி. பின்னர் தன் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக,  8 மாதக் கைக்குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியேறிய, ஆனி அவரின் பெற்றோர் வீட்டிலும் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. இதன் காரணமாக அவர் ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். ஆனால், கடைசியாக தனது பாட்டியின் வீட்டில் தஞ்சம் புகுந்தார்.

ஆனாலும், வைராக்கியத்துடன் இருந்த ஆனி, அவரின் தைரியமான மனதிடத்துடன்  வர்கலாவில்    குழந்தையை பெற்று பின், அங்கேயே டெலிவரி செய்வது, எலுமிச்சைப் பழம் விற்பது  திருவிழாக்களில் ஐஸ்கிரீம், குளிர்பானங்கள் விற்பனை செய்வது போன்ற தனக்கு கிடைத்த வேலைகளை பார்த்துக் கொண்டு, கல்வியையும் கைவிடாமல் தொடர்ந்து படித்து வந்துள்ளார்.

தற்போது போலீஸ்  தகுதி தேர்வின் மூலம் தேர்ச்சி பெற்ற அவர், சாலையில் தான் ஐஸ்கிரீம் விற்பனை செய்த ஊரிலே போலீஸ் சப் இன்ஸ்பெக்டராக  ஆனி பணிக்குச் சேர்ந்துள்ளார்.

அவர் தனது பேஸ்புக் கணக்கில் பத்து ஆண்டுகளுக்கு முன்பு, இதே வர்கலா பகுதியில் சிவகிரி யாத்திரைக்கு வரும் மக்களுக்கு எலுமிச்சை பழமும் மற்றும் ஐஸ்கிரீம் எல்லாம் விற்றுக் கொண்டு இருந்தேன். ஆனால் இன்று, நான் போலீஸ் சப் இன்ஸ்பெக்டராக  அதே இடத்திற்குத் திரும்புகிறேன் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது என கூறி உள்ளார்.

கேரள காவல்துறையின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் கணக்கின் மூலம் அவரது  கதையை ஒரு குறிப்புடன் பகிர்ந்து கொண்டது. இது ஒரு போராட்டத்தின் கதை. பல சவால்களுக்கு உறுதியுடன் நின்ற எங்கள் சகாவின் வாழ்க்கை கதை எனவும் குறிப்பிட்டு உள்ளது.

ஆனியின் கதை கேரளா முழுவதும் அவருக்கு அதிக  ரசிகர்களை பெற்று தந்துள்ளது. இது குறித்து நடிகர் உன்னி முகுந்தன் பாராட்டி பதிவிட்டுள்ளது, பெண்கள் அதிகாரம் என்பது  நிஜமாகிறது,  பெரிய கனவுகள் மூலமாக. உண்மையான போராளி. அனைவருக்கும் உத்வேகமாக இருப்பார் என கூறி உள்ளார்.

சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் தனது பேஸ்புக்கின் மூலம்  அவரது கணவரும் பெற்றோரும் அவளை வீதியில் கைவிட்ட போதும், அவர் வாழ்க்கையின் பல சவால்களுக்கு எதிராக போராடி பட்டதாரியாகவும், முதுகலை பட்டங்களையும்  பெற்று உள்ளார். அதே நேரத்தில் ஒரு குழந்தையையும் வளர்த்து வந்துள்ளார். ஆனி உலகெங்கிலும் உள்ள பெண்களுக்கு ஒரு மிக சிறந்த எடுத்துகாட்டாக இருக்கிறார் எனவும் கூறி உள்ளார்.

காங்கிரஸ் எம்.பி. சசி தரூர்  தனது பதிவில் எஸ்.பி. ஆனியின்  வாழ்க்கை கதை அனைவரையும் மிகவும் உற்சாகமூட்டுகிறது. அவர் வாழ்க்கையின் வெற்றி மற்றும் மன வலிமைக்கு எடுத்துக்காட்டாக என கூறியுள்ளார்.