திமுகவிற்கு எதிராகவே ஸ்டாலினிடம்  மனு கொடுத்த பெண்! சமூக வலைத்தளங்களில் வைரலாகும்  மனு!

Photo of author

By Rupa

திமுகவிற்கு எதிராகவே ஸ்டாலினிடம்  மனு கொடுத்த பெண்! சமூக வலைத்தளங்களில் வைரலாகும்  மனு!

தேர்தல் நெருங்கி வரும் வேலையில் ஸ்டாலின் அவர்கள் ஆட்சியை பிடிப்பதற்காக பல அறிக்கைகளை கூறிவருகிறார்.இந்நிலையில் “உங்கள் தொகிதியில் ஸ்டாலின்” என்ற பொதுகூட்டத்தை கூட்டி வருகிறார்.இதில் பொது மக்கள் கலந்துக்கொண்டு தங்களின் கோரிக்கைகளை மனு மூலம் ஸ்டாலினிடம் தெரிவிக்க வேண்டும்.இந்நிலையில் நாகப்பட்டினம் அருகே நடந்த பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் நாங்கள் ஆட்சிக்கு வந்து நூறு நாட்களுக்குள் நீங்கள் கொடுக்கும் மனுக்களிலுள்ள கோரிக்கைகளை  நிறைவேற்ற போவதாக கூறினார்.

இதில் வேளாங்கண்ணி அடுத்து தெற்கு பொய்கைநல்லூரைச் சேர்ந்தவர் வசந்தி.இவருக்கு வயது 48.இவர் இந்தக்கூட்டத்தில் பங்கேற்று ஸ்டாலினிடம் மனுக்கொடுத்தார்.இந்த மனு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.வசந்தி அந்த மனுவில் கூறியது,திமுக கீழையூர் ஒன்றிய செயலாளரும்,வேளாங்கண்ணி முன்னால் பேரூராட்சி தலைவருமான தாமஸ் ஆல்வா எடிசன் ஆகியோர் எங்களுக்கு சொந்தமான வேளாங்கண்ணியிலுள்ள  பலக் கோடி மதிப்பிளான சொத்துக்களை போலி ஆவணங்கள் மூலம் கைப்பற்றி விட்டனர்.

போலீசாரிடம் புகார் அளித்தும் பயனில்லை.அவர்கள் வைத்திருக்கும் செல்வாக்கை பயன்படுத்தி போலீசாரிடமிருந்து  தப்பித்துவிடுகிறார்கள்.எடிசன் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து எங்கள் நிலத்தை மீட்டு தருமாறு அந்த மனுவில்  கேட்டுக்கொண்டார். இதையடுத்து வசந்தியின் மகன் சந்தோஷ் கூறியது,எங்கள் குடும்பத்திற்கு சொந்தமான பல கோடி மதிப்பிலுள்ள  சொத்துக்களை  போலி ஆவணங்கள் கொண்டு எங்களிடமிருந்து பரித்துக்கொண்ட தாமஸ் ஆல்வா எடிசன் மீது வழக்கு பதிவு செய்யுமாறு மனு கொடுக்கச்சென்றோம்.

திமுக கட்சியினர் அங்கு இருக்கும் பெட்டியில் உங்களது மனுவை போடுங்கள் தலைவர் உங்களை மைக்கில் கூப்பிடுவார் அப்போது நீங்கள் சென்று உங்கள் குறைகளை கூறுங்கள்.உங்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவார் எனக் கூறினார்கள்.நாங்கள் திமுக கட்சியினர் கூறியது போலவே செய்தோம் ஆனால் எல்லோர் பெயரையும் கூப்பிட்ட ஸ்டாலின் எங்களது பெயரை மைக்கில் அழைக்கவில்லை.நாங்கள் ஏமாற்றத்துடன் திரும்பிவிட்டோம் எனக் கூறினார்.

கட்சியின் செயலாளர் மீதே கொடுக்கப்பட்ட மனுவை ஸ்டாலின் ஏற்று அவர்களது வேண்டுகோளை தீர்ப்பார?என்று கேள்விக்குரியகவே உள்ளது.