இன்றும் மனிதநேயம் உள்ளது என உணர்த்திய பெண்! கொட்டும் மழையில் உதவி!

Photo of author

By Kowsalya

இன்றும் மனிதநேயம் உள்ளது என உணர்த்திய பெண்! கொட்டும் மழையில் உதவி!

கொட்டும் மழையில் மழையை கூட பொருட்படுத்தாமல் வாகன ஓட்டிகளை பாதுகாக்க பெண் ஒருவர் செய்த செயல் சமூக வலைத்தளங்களில் பரவலாகி பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.

மும்பையில் சில தினங்களாக கனமழை கொட்டித் தீர்த்துக் கொண்டு வருகிறது. எனவே ஆங்காங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இதற்கு நடுவே அந்த பெண் எந்த சிரமமும் பார்க்காமல் கொட்டும் மழையிலும் வாகன ஓட்டிகளை பாதுகாப்பதற்காக நடுரோட்டில் நின்று கொண்டு வாகன ஓட்டிகளுக்கு உதவி செய்யும் வீடியோ வலைதளங்களில் பரவி உள்ளது.

தெற்கு மும்பையில் ஏற்பட்ட கனமழையால் அங்குள்ள திறந்தவெளி பாதாளசாக்கடை ஒன்று மறைந்துள்ளது.இதனால் அந்த வழியில் செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி தவிக்காமல் இருக்க கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் எச்சரிக்கும் பணியை செய்து வருகிறார்.

இப்பெண்ணின் இந்த செயலானது இப்பொழுதும் மனிதநேயம் மனிதர்களிடம் உள்ளது என்பதை சுட்டிக் காட்டியுள்ளது. ஒவ்வொரு முறையும் இயற்கை பேரிடர் நடக்கும்போதெல்லாம் மனிதநேயம் மேலோங்கும். யாரோ ஒருவர் யாரோ ஒருவருக்குப் எதிர்பார்ப்பின்றி உதவ முன்வருவர். இதையே மனித நேயம் என்பர்.

சமூக வலைத்தளங்களில் அந்தப் பெண்ணுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.