கொரோனாவால் அனுமதிக்கப்பட்ட பெண் 30 நிமிடத்திலேயே உயிரிழந்ததால் டாக்டருக்கு நடந்த கொடூரம் :?

Photo of author

By Parthipan K

கொரோனாவால் அனுமதிக்கப்பட்ட பெண் 30 நிமிடத்திலேயே உயிரிழந்ததால் டாக்டருக்கு நடந்த கொடூரம் :?

Parthipan K

சேலம் மாவட்டத்தில் கொரோனா நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகின்றது. இந்நிலையில் நேற்று கொண்டப்பநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த 50 வயது பெண் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையுடன் சேலம் அரசு பொது மருத்துவமனையில் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

ஆனால் அனுமதிக்கப்பட்ட அரை மணி நேரத்திலேயே அப்பெண்மணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் அந்தப் பெண்ணுடன் வந்த அவரது உறவினர்கள், வாலிபர்கள், சிகிச்சை அளித்த மருத்துவரிடம் , “உரிய சிகிச்சை அளிக்க வில்லை, அதனால் தான் இறந்துவிட்டார்” என்று ஆத்திரமடைந்து திடீரென மருத்துவரை ‘பளார்’ என அறைந்து தாக்கியுள்ளனர்.

இந்த சம்பவம் சேலம் அரசு பொது மருத்துவமனையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மேலும் இது குறித்து போலீஸ் விசாரணை செய்யப்பட்டு வருகிறது.