ஒட்டு துணியில்லாமல் துணை முதலமைச்சரை பார்க்க சென்ற பெண்!! அதிர்ச்சியில் தொண்டர்கள்!!

Photo of author

By Jeevitha

Andhra Pradesh: ஆந்திராவில் உள்ள விஜயவாடாவில் ஜனசேன கட்சி அலுவலகத்திற்கு அகோரிணி நாக சாது என்ற பெண் நிர்வாணமாக சென்று துணை முதல்வர் பவன் கல்யானை நேரில் சந்திக்க வந்துள்ளேன் என கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அகோரிணி நாக சாது என்ற பெயரை கூறினால் ஆந்திராவில் யாருக்கும் தெரியாது என்று கூறமாட்டார்கள். ஏனெனில் அந்த பெண் எந்த ஒரு இடத்திற்கு சென்றாலும் நிர்வாணமாக காரில் சென்று கொண்டிருக்கிறார். அது மட்டும் அல்லாமல் கோவில்களுக்கும் கூட நிர்வாணமாக சென்றுள்ளார். அந்த சம்பவம் பக்தர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் காளஹஸ்தி என்ற கோவிலுக்கும் அதே போல் ஒட்டு துணி இல்லாமல் நிர்வாணமாக சென்றுள்ளார். அப்போது அங்குள்ள பாதுகாப்பு ஊழியர்கள் அகோரிணி நாக சாதுவை பிடித்து அவருக்கு ஆடை அணிவித்து, பிறகு கோவிலுக்கு செல்லுமாறு அனுப்பி வைக்கப்பட்டார். இப்படியே அந்த பகுதியில் எங்கு சென்றாலும் நிர்வாணமாக செல்கிறார் அகோரிணி நாக சாது. இதனை தொடர்ந்து அகோரிணி நாக சாது விஜயவாடாவில் ஜனசேன கட்சி அலுவலகத்திற்கு நிர்வாணமாக சென்றுள்ளார்.

அப்போது அவர் நான் துணை முதல்வர் பவன் கல்யானை நேரில் பார்க்க வேண்டும். அவரை சந்திக்க வேண்டும் என கூறியுள்ளார். இதை கேட்ட தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். அப்போது அவரது பாதுகாப்பு ஊழியர்கள் துணை முதலமைச்சர் இங்கு இல்லை நீ இங்கிருந்து செல் என கூறியுள்ளார்கள். ஆனால் அதை கேட்காமல் அந்த பெண் நடுரோட்டில் உட்கார்ந்து போராட்டம் நடத்த தொடங்கி விட்டார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.