டாஸ்மாக் ஊழியர்களே எச்சரிக்கை! இதை மீறினால் ஒழுங்கு நடவடிக்கை!

டாஸ்மாக் ஊழியர்களே எச்சரிக்கை! இதை மீறினால் ஒழுங்கு நடவடிக்கை!

தமிழகத்தில் 21 வயதிற்கு கீழ் உள்ள நபர்கள் பிளாக்கில் மதுபானம் விற்று வருவதால் டாஸ்மாக் கடைத்திருக்கும் நேரத்தை மாற்றுமாறு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். மேலும் நீதிமன்றம் தற்பொழுது 21 வயதிற்கும் கீழ் உள்ள நபர்கள் மது விற்பனை தடுக்க எந்த வகைகளில் நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படியும் கூறி உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதனைத் தொடர்ந்து இன்று அனைத்து மதுபான கடைகளுக்கும் டாஸ்மாக் நிர்வாக மேலாண் இயக்குனர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். தற்பொழுது உள்ள டாஸ்மாக் ஊழியர்கள் மதுபான கடைக்கு வருபவர்களிடம் வீண் தகராறில் ஈடுபடுகின்றனர்.இதனால் டாஸ்மாக்கிற்கு அவப்பெயர் ஏற்படுகிறது.அதுமட்டுமின்றி பணி நேரத்தில் தங்களின் சொந்த வேலைகளை பார்க்க சென்று விடுகின்றனர்.

இதுகுறித்து பல புகார்கள் வந்துள்ளது.அந்தவகையில் இனி டாஸ்மாக்கில் பணிபுரியும் ஊழியர்கள் மதுபானம் கடைக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் நடந்து கொண்டாலோ அல்லது உயர் அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ளும் போது கடைகளில் இல்லை என்றாலும் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

அதனால் இனிவரும் நாட்களில் டாஸ்மாக்கள் பணிபுரியும் ஊழியர்கள் டாஸ்மாக்கிற்கு களங்கம் ஏற்படுத்தாமல் நடந்து கொள்ள வேண்டும். அதேபோல பணி நேரம் முடிவடைவதற்குள் வேறெங்கும் வெளியே செல்லக்கூடாது. அங்கு வரும் நபர்களிடமும் கணிசமான முறையில் நடந்து கொள்ள வேண்டும் என சுற்றறிக்கையில் கூறியுள்ளனர்.இந்த வரைமுறைகளை மீறுபவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.

Leave a Comment