ஆண்,பெண் அனைவரும் தங்கள் முடியை பராமரிப்பதில் அதிக அக்கறை செலுத்துகின்றனர்.தலைமுடி நீளமாகவும்,அடர்த்தியாகவும் வளரவும்,கருமை நிறத்தில் இருக்கவும் பல குறிப்புகளை பின்பற்றி வருகின்றோம்.மூலிகை எண்ணெய்,மூலிகை ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை பராமரித்து வந்தால் முடி வளர்ச்சி நன்றாக இருக்கும் என்பது பெரும்பாலானோரின் கருத்து.
அதேபோல் தலைக்கு எண்ணெய் வைத்தால் பொடுகு வராது.அதேபோல் வெடிப்பு முடியை வெட்டுதல்,அமாவாசை நாளில் முடி வெட்டுதல் போன்றவற்றை செய்தால் முடி வளரும் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.ஆனால் இத்தனை நாட்கள் நாம் பின்பற்றி வந்த பழக்கங்கள் அனைத்தும் தவறானது என்று ஆய்வுகள் சொல்கிறது.
தலைக்கு எண்ணெய் வைப்பதால் முடி வளரும் என்பது தவறான கருத்து.தலைக்கு எண்ணெய் வைப்பதற்கும் முடி வளர்ச்சிக்கும் எந்த சம்மந்தமும் இல்லை.நமது முடி வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நமது உடலில் இருந்தால் போதுமானது.
தலைக்கு எண்ணெய் வைத்தால் பொடுகு வராது என்பது பலரது கருத்து.ஆனால் உண்மையில் தலைக்கு எண்ணெய் வைப்பதால்தான் பொடுகு வருகிறது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.அதேபோல் முடி வெட்டினால் நன்றாக முடி வளரும் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.
ஆனால் உண்மையில் முடி வெட்டுவதால் சீக்கிரம் முடி வளர்வதில்லை.குறிப்பாக அமாவாசை நாளில் முடி வெட்டினால் முடி வளரும் என்பது நாம் காலம் காலமாக பின்பற்றி வரும் ஒரு பழக்கமாக உள்ளது.இது முற்றிலும் தவறான கருத்து.
வெள்ளை முடியை பிடுங்கினால் அவை பெருகிவிடும் என்று பலரும் நினைக்கின்றனர்.ஆனால் உண்மையில் வெள்ளைமுடியை பிடுங்கினாலும் பிடுங்காவிட்டாலும் தலையில் வெள்ளை முடி வரும்.இது ஊட்டச்சத்து குறைபாட்டை பொறுத்துள்ளது.தலைக்கு எண்ணெய் வைக்க விரும்பினால் குளிர்பதற்கு முன்னர் இரண்டு மணி நேரத்திற்கு முன் வைக்கலாம்.அதன் பிறகு குளித்தால் முடி ஆரோக்கியம் மேம்படும்.