உணவு டெலிவரி பையில் காதலியை தூக்கிக் கொண்டு சுற்றிய இளைஞர்! சோதனையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்! 

0
148
#image_title

உணவு டெலிவரி பையில் காதலியை தூக்கிக் கொண்டு சுற்றிய இளைஞர்! சோதனையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்! 

உணவு டெலிவரி செய்யும் பையில் இளைஞர் ஒருவர் தனது காதலியை தூக்கிக் கொண்டு சுற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பெரு நாட்டை சேர்ந்தவர் ஜூலியோ சீசர் பெர்மேஜோ வயது 26. இவர் அங்கு உணவு டெலிவரி செய்யும் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் அவர் தனது நண்பர்களுடன் ஒரு பூங்காவில் மது அருந்தி கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த போலீசார் சோதனை நடத்தினர்.  அங்கு சீசர் வைத்திருந்த உணவு டெலிவரி பையை திறந்து பார்க்கும் போது,  அதில் ஏதோ வித்தியாசமாக இருந்ததால்  அதை வெளியே எடுத்து ஆய்வு செய்த போது அதில் மம்மி உடல் இருந்ததைக் போலீசார் பார்த்து அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

இது தொடர்பாக போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் இந்த மம்மியை அவரது தந்தை 30 வருடங்களுக்கு முன்னால் வீட்டில் கொண்டு வந்து வைத்திருந்ததாக கூறியுள்ளார். சீசர் பெர்மேஜோ அந்த மம்மியை “தனது ஆன்மீக காதலி” என்றும் கூறியுள்ளார். மேலும் அவர் நான் அவளோடு உரையாடுவேன் என்றவர் மேலும் வீட்டில், அது என் அறையில் இருக்கும், அதனுடன் தான் நான் எப்போதுமே தூங்குவேன். எனது நண்பர்களுக்குக் காட்டுவதற்காக மம்மியை எடுத்துச் வந்ததாக கூறி உள்ளார். இதனை அடுத்து அவரிடமிருந்த மம்மியை பறிமுதல் செய்த போலீசார் அதனை தொல் பொருள் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பி வைத்தனர். 

மம்மியை ஆய்வு செய்த கலாச்சார அமைப்பு வெளியிட்ட தகவலில்,

இறந்த மம்மி ஆண் நபரின் உடலாகும். இது 600 முதல் 800 ஆண்டுகள் பழமையானது எனவும்  மஹிஸ்பானிக் காலத்திற்கு முந்தைய மம்மி இது  இந்த மம்மி குறைந்தது 45 வயதுடைய மனிதனுடையதாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. மம்மி பண்டைய கால பொருட்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் அருங்காட்சியகத்திற்கு எடுத்துச் செல்லப்பட உள்ளதாக பெரு அரசு கூறியுள்ளது.