தினமும் உணவாக சடலத்தை சாப்பிட்ட இளைஞன்! நெஞ்சை பதற வைய்த்த சம்பவம்!

Photo of author

By Hasini

தினமும் உணவாக சடலத்தை சாப்பிட்ட இளைஞன்! நெஞ்சை பதற வைய்த்த சம்பவம்!

பொதுவாக அசைவம் சாப்பிட்டால் கூட புதிதாக வாங்கி சாப்பிட வேண்டும் என்று தான் நாமெல்லாம் நினைப்போம். ஆனால் இந்த பையனோ டப்பாவில் அடைத்து வைத்து தினமும் சிறிதளவு ஆத்திரத்தை குறைக்க சாப்பிட்டு உள்ளான்.

28 வயதான ஆல்பர்ட்டோ சான்ஸ் கோமஸ், ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டின் கிழக்குப் பகுதியில் வசித்து வந்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கும் இவரது 60 வயதான தாய்க்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரத்தில் தனது தாயை கொடூரமாக கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். அப்போதும் ஆத்திரம் அடங்காமல் அந்த பையன் அவரது தாயின் சடலத்தை துண்டு துண்டாக வெட்டி பிளாஸ்டிக் டப்பாக்களில் போட்டு பதப்படுத்தி வைத்துள்ளார். பின்னர் 2 வாரங்களுக்குப் பிறகு அந்த உடல் பாகங்களில் சிலவற்றை அவர் சமைத்து சாப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் வீட்டு நாய்க்கும் சிலவற்றை உணவாக கொடுத்துள்ளார். இதனிடையே கடந்த 2019 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அவரது தாயின் நெருங்கிய தோழி தனது தோழியை நீண்ட நாட்களாக காணவில்லை என போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

எனவே போலீசார் அந்த வீட்டிற்கு சென்று சோதனை செய்த போது டப்பாக்களில் இருந்த பெண்ணின் உடல் பாகங்களை பார்த்து அதிர்ந்தனர். இதன் காரணமாக ஆல்பர்ட்டோவை கைது விசாரித்தனர். அப்போது அவன் ஒத்துக்கொண்டதன் பேரில் அவனை கைது செய்தனர்.

இந்தநிலையில் இந்த வழக்கின் இறுதி விசாரணை நேற்று மாட்ரிட் கோர்ட்டில் நடைப் பெற்றது. இந்த, விசாரணையின்போது ஆல்பர்ட்டோ, கொலை நடந்த சமயத்தில் தான் மன நோயால் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறியுள்ளார். அதனை ஏற்காத நீதிபதி ஆல்பர்ட்டோவுக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

உலகம் எங்கோ சென்று கொண்டு உள்ளது. பெற்ற தாயையே கொலை செய்து சமைத்தும் சாப்பிட்டு வந்துள்ளான். அந்த தோழி மட்டும் இல்லை என்றால் இந்த விஷயம் நமக்கு தெரியாமலேயே போய் இருக்கும்.