காதலியின் மடியில் விழுவதாக நினைத்து கிணற்றில் விழுந்த வாலிபர்! காதலுக்கு கண்ணில்லை என்பதை நிரூபித்த இளைஞர்! 

Photo of author

By Rupa

காதலியின் மடியில் விழுவதாக நினைத்து கிணற்றில் விழுந்த வாலிபர்! காதலுக்கு கண்ணில்லை என்பதை நிரூபித்த இளைஞர்!

இந்த பிரபஞ்சத்தில் காதல் என்பது அனைவருக்கும் பொதுவான ஒன்று. அவ்வாறு காதல் மயக்கத்தில் ஒரு நபருக்கு ஏற்பட்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.தற்போதைய காலகட்டத்தில் தனது காதலியுடன் வாட்ஸ்அப் ,ஃபேஸ்புக் போன்றவற்றில் பேசி தங்களது காதலை பகிர்ந்து வருகின்றனர்.அந்த வகையில் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே புதன்சந்தை பகுதியில் வசிப்பவர் தான் ஆஷிக். இவரது சொந்த ஊர் திருவாரூர் மாவட்டம். இவர் வேலைக்காக இங்கு வந்துள்ளார்.புதன் சந்தை அருகிலுள்ள நூற்பாலை ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார்.இவர் ஒரு பெண்ணை திருவாரூர் மாவட்டத்தில் காதலித்து வந்துள்ளார்.அவர் சொந்த ஊரில் இருந்து இங்கு வந்து வேலை பார்த்து வருவதால் தன் காதலியை பார்க்க முடியவில்லை.

அந்த காரணத்தினால் தினந்தோறும் வேலை முடித்துவிட்டு அவரது காதலியிடம் செல்போன் மூலம் உரையாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.அதேபோல நேற்று வேலை முடிந்ததும் அந்த நூற்பாலைக்கு அருகில் ஒர் கிணறு இருந்துள்ளது.இவர் அந்தக் கிணற்றின் பக்கம் நின்று கொண்டு தன் காதலியுடன் உரையாடி வந்துள்ளார்.அவர்களது உரையாடல் நீண்டு கொண்டே போனதால் கவனம் சிதறி ஆஷிக் பேசிக்கொண்டிருக்கும்போதே அந்த கிணற்றுக்குள் விழுந்துள்ளார்.ஆஷிக் அந்தக் கிணற்றில் விழுந்ததும் கூச்சலிட்டு அக்கம் பக்கம் உள்ளவர்களை கூப்பிட்டுள்ளார். ஆனால் அது பணி நிறைவு நேரம் என்பதால் அங்கு யாரும் காணப்படவில்லை.ஆஷிக் 10 மணி நேரத்திற்கும் மேலாக அந்தக் கிணற்றிலேயே தத்தளித்து இருந்துள்ளார்.

அந்தக் கிணற்றுக்கு படிகள் ஏதும் இல்லாததால் அவரால் மேலே ஏறியும் வர முடியவில்லை. விடியற்காலையில் அந்த கிணற்றின் அருகில் மக்கள் நடமாடுவதை அவர் கண்டு மீண்டும் சத்தமாக கூச்சலிட்டுள்ளார்.கிணற்றுக்குள் இருந்து ஏதோ சத்தம் கேட்டதும் மக்கள் கிணற்றை எட்டி பார்த்தனர். கிணற்றுக்குள் ஆஷிக் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.அவரை காப்பாற்ற முயன்றனர்.அதனையடுத்து தீயணைப்பு துறையினர் வரவழைத்து கயிறு கட்டி கிணற்றிலிருந்து அவரை மேலே தூக்கினார்.தற்பொழுது அவருக்கு கை முறிவு ஏற்பட்டு நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.