குடிமகன்கள் திருந்த வித்தியாசமாக யோசித்த இளநீர் வியாபாரி! பரபரப்பை கிளப்பிய வினோத போஸ்டர்! 

0
320
#image_title

குடிமகன்கள் திருந்த வித்தியாசமாக யோசித்த இளநீர் வியாபாரி! பரபரப்பை கிளப்பிய வினோத போஸ்டர்! 

செங்கல்பட்டு அருகே வினோதமாக குடியை மறந்து ஒரு வருடம் ஆன நிலையில் இளநீர் வியாபாரி செய்த செயல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவர் குடிப்பழக்கத்தை நிறுத்தியதற்காக ஊர் முழுவதும் போஸ்டர் அடித்து ஒட்டி உள்ளார். இந்த ருசிகர சம்பவம் குறித்து கூறப்படுவதாவது,

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் ஊராட்சி புவனேஸ்வரி நகர் பகுதியை சேர்ந்தவர் மனோகரன் வயது 53. இவருக்கு திருமணம் ஆகி 4 மகன்கள் உள்ளனர். அவர் அதே பகுதியில் இளநீர் வியாபாரம் செய்து வந்தார்.  இதையடுத்து கடந்த 30 வருடங்களாக  மனோகரன்  குடிப்பழகத்திற்கு அடிமையாகி உள்ளார். மதுவுக்கு அடிமையானதோடு  மட்டுமில்லாமல், குடித்துவிட்டு வந்து  குடும்பத்தினரிடம் அடிக்கடி வீட்டில் தகராறு செய்வதை வாடிக்கையாக கொண்டு வந்துள்ளார்.

மேலும் சம்பாதிக்கும் அனைத்து பணத்தையும் மது குடித்தே ஒழித்தார். இதையடுத்து சென்ற வருடம் குடிப்பதால் ஏற்படும் உடல்நல பிரச்சினைகள் மற்றும் தீமைகள் குறித்து கவலைப்பட்ட மனோகரன் குடிப்பழக்கத்தை நிறுத்த முடிவு செய்தார்.

இந்த நிலையில் மனோகரன் டைரி ஒன்றை எடுத்து அதில் கடைசியாக தான் குடித்த நாளை எழுதி வைத்துள்ளார். இதையடுத்து தொடர்ச்சியாக சுமார் ஓராண்டு குடிக்காமல் இருந்து வந்துள்ளார். குடிக்கும் எண்ணம் தோன்றும் போதெல்லாம் டீ குடிப்பது, விரும்பிய உணவை சாப்பிடுவது போன்றவற்றை மேற்கொண்டு குடிப்பழக்கத்தை தவிர்த்து உள்ளார்.

இதையடுத்து அவர் குடிப்பழக்கத்தை விட்டு ஓராண்டு நிறைவானதும் தன்னைப்போல் மற்றவர்களும் குடிப்பழக்கத்தை நிறுத்தி திருந்த வேண்டும் என நினைத்துள்ளார். எனவே குடிப்பழக்கத்தில் அடிமையானவர்கள் திருந்த வேண்டும் என்ற நோக்கத்தில் குடியை மறந்த முதலாம் ஆண்டு தினம் என்று போஸ்டர் அடித்து ஊர் முழுவதும் ஒட்டி பரபரப்பையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளார்.

அவரின் இந்த வினோத செயலானது அந்த ஊர் பக்கம் மட்டுமல்லாது அனைத்து பகுதிகளிலும் சமூக வலைதளம் மூலமாக வேகமாக பரவி வருகிறது.

Previous articleஅரசு பள்ளி மாணவர்களுக்கு வெளிவந்த அசத்தல் அறிவிப்பு! நான் முதல்வன் திட்டத்தால் ஏற்பட்ட மாற்றம்!
Next articleபழைய ஓய்வூதிய திட்டத்தில் நீங்களும் சேர்ந்து கொள்ளலாம்! அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!