சீறிபாய்ந்து வரும் வெள்ளத்தில் பத்துமாத குழந்தையை தரையில் விட்டு தண்ணீரில் குதித்த இளம்பெண்?
மத்திய பிரதேசம் போபாலில் உள்ள காதையகலா என்கிற கிராமத்தை சேர்ந்தவர் தான் இந்த பெண்.இவரின் பெயர் ரபினா கன்ஜர் இவருடைய வயது 30. இவர் தன்னுடைய பத்து மாத கைக்குழந்தையுடன் வந்து கால்வாய் அருகே உள்ள குடிநீர் பைப்பில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தார்.அப்போது கால்வாயில் மற்றொரு பகுதியில் ராஜு மற்றும் ஜிதேந்திர என்ற சிறு வயதே ஆன இளைஞர்கள் நின்று தண்ணீர் ஓடுவதை ரசித்து வந்தனர்.
திடிரென்று இருவரும் கால்வாயில் இறங்க முயற்சித்தனர்.அந்நேரமாக பார்த்து அந்த கால்வாயில் கன மழை காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.சிறுவர்களே இந்த கால்வாயில் நீங்கள் இறங்க வேண்டாம் என கூச்சலிட்டார் அந்த பெண். அதனை கேக்காத அந்த சிறுவர்கள் விடாபிடியாக கால்வாயில் இறங்கினர்.
சீறிபாய்ந்து வரும் வெள்ளத்தில் சிக்கி இரு சிறுவர்களும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டனர்.எங்களை காப்பாற்றுமாறு கத்தி கைகளை மேலே உயர்த்தி கூச்சலிட்டனர்.இதை பார்த்து கொண்டிருந்த ரபினா கன்ஜர் வெள்ளம் என்றும் பாராமல் தனது பத்து மாத குழந்தையை தரையில் இறக்கி விட்டு கால்வாயில் குதித்தார்.பின்னர் ராஜு என்ற சிறுவனை மீட்டு கரைக்கு கொண்டு வந்தார்.
மேலும் ஜிதேந்திர என்ற சிறுவனை காப்பாற்ற முயற்சிக்கும் பொது அவர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார்.அவரது உடல் மறுநாள் மீட்கப்பட்டது.தன் உயிரையும் பொருட்படுத்தாமல் சீறிபாய்ந்து வரும் தண்ணீரில் குதித்து சிறுவனின் உயிரை காப்பாற்றிய அந்த பெண்மணிக்கு அப்பகுதி மக்கள் அனைவரும் பாராட்டி வருகின்றனர்.தகவல் அறிந்த காவல் துறையினரும் அவருக்கு வெகுமதி அளித்தனர்.