கொரோனா பாதிக்கப்பட்ட தனது நண்பனுக்கு திடீர் ஷாக் கொடுத்த இளைய தளபதி!!

0
119

தமிழ் சினிமாவின் இளைய தளபதி விஜய், கொரோனா அறிகுறிகள் இருந்தால் தனிமைப்படுத்தப்பட்ட தனது சிறுவயது நண்பன் ஆன  நடிகர்சஞ்சீவ்-வின் வீட்டிற்கே மதிய உணவு கொண்டு சென்று இன்ப அதிர்ச்சியைக் கொடுத்துள்ளார்.

சஞ்சீவ் தனக்கு கொரோனா அறிகுறி இருப்பதால் இளைய தளபதி விஜய்யை நேரில் சந்திக்காமல் தனது வாட்ச்மேன்  இடம் சாப்பாட்டை கொடுத்து விடுமாறு சொல்லியிருக்கிறார்.

அதே போன்றே விஜயும்  சஞ்சீவ்-வை நேரில் சந்திக்காமல்  சாப்பாட்டை  கேட்டில் கொடுத்துவிட்டு சென்றுவிட்டாராம். மேலும்  புதிய கீதை, பத்ரி போன்ற படங்களில் தனது சிறுவயது நண்பர் கூட்டங்கள் உடன் நடித்த விஜய் தற்போது  மாஸ்டர் படத்திலும்  அதே நண்பர்களுடன் நடித்துள்ளாராம்.

மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு டெல்லியில் நடைபெற்ற போது காற்று மாசுபாடு காரணமாக படப்பிடிப்பு சில நாட்களில் எடுக்கப்பட்ட நிலையில் அந்த நேரத்தில் நடிகர் விஜய், ஸ்ரீநாத், சஞ்சீவ் என நண்பர்கள் அனைவரும் சேர்ந்து நீண்ட நாட்களுக்குப் பிறகு கிரிக்கெட் விளையாடி உள்ளனர்.

இப்படி பல சுவாரஸ்யங்களை நடிகர் சஞ்சீவ் ஒரு தனியார் தொலைக்காட்சி பேட்டியில் மூலம் தெரிவித்துள்ளார்.

Previous articleஇன்று (26.8.2020) பெட்ரோல் மற்றும் டீசலின் விலை நிலவரம்?
Next articleதனியார் பள்ளிகளில் நாளை முதல் இலவசமாக கல்விக்கு விண்ணப்பிக்கலாம் : தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட செய்தி