பொதுவாகவே சில இடங்களில் சில தினங்களுக்கு வெளியூர் சென்று வந்தால் அந்த வீட்டில் பயங்கரமான கொள்ளை சம்பவம் நடந்து இருக்கும்.
வீட்டில் இருக்கும் பணம், நகை அல்லாது வீட்டு உபயோக பொருட்களை கூட திருடர்கள் விட்டு வைக்க மாட்டார்கள்.
சில இடங்களில் சாதாரண திருட்டு கொலையில் கூட முடிந்து இருக்கிறது.
சில திருடர்கள் தாங்கள் திருடும் பொருட்களை கை மாற்ற நினைக்கும் போதே கையும் களவுமாக மாட்டி கொள்வார்கள். சிலர் CCTV கேமரா மூலம் மாட்டி கொள்வார்கள். சில திருட்டு கடைசி வரை விடை தெரியாமல் முடிந்து விடும்.
இது போன்ற களேபரங்களுக்கு நடுவே சில காமெடி திருடர்களும் உண்டு, திருட வந்த இடத்தில் சாப்பிடுவது, சாப்பிட்டு விட்டு தூங்கி விடுவது என அவ்வப்போது நடக்கும்.
இந்த செய்தியில் ஒரு திருடன் வித்தியாசமாக வீட்டின் ஓனருக்கு கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு செண்டிருக்கிறார்.
மத்தியப் பிரதேசம் மாநிலம் தேவாஸ் மாவட்டத்தின் காடேகான் நகரில் துணை ஆட்சியர் வீடு உள்ளது. கடந்த இரு வாரங்களாக வெளியூர் சென்று இருந்த நிலையில், கடந்த சனிக்கிழமை வீடு திரும்பிய கலெக்டருக்கு ஒரு மிகப்பெரிய அதிர்ச்சி காத்து இருந்தது.
அவர் வீடு திரும்பிய போது வீட்டின் பொருட்கள் அனைத்தும் கலைந்து கிடந்தன. உடனடியாக அவரும் போலீசாருக்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் வீட்டின் அனைத்து இடங்களிலும் சோதனையிட்டனர்.
அப்போது வீட்டில் அந்த திருடன் எழுதி வைத்த கடிதம் ஒன்று சிக்கியது. அந்த திருடன் திருட வந்த இடத்தில் பணம் இல்லாத காரணத்தினால் “பணம் இல்லாத வீட்டிற்கு பூட்டு எதுக்கு கலெக்டரே” என எழுதி இருந்தார்.
தற்போது இந்த கடிதம் இணையத்தில் வைரலாகி வருகிறது.