இவர்களின் குழந்தைகளுக்கு ரூ.25,000 உதவித்தொகை கிடைக்கும்!! எப்படி விண்ணப்பம் செய்வது?

Photo of author

By Divya

இவர்களின் குழந்தைகளுக்கு ரூ.25,000 உதவித்தொகை கிடைக்கும்!! எப்படி விண்ணப்பம் செய்வது?

Divya

Updated on:

Their children will get a scholarship of Rs.25,000!! How to apply?

இவர்களின் குழந்தைகளுக்கு ரூ.25,000 உதவித்தொகை கிடைக்கும்!! எப்படி விண்ணப்பம் செய்வது?

இந்திய அரசின் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் பீடி தொழிலாளர்,சுரங்கத் தொழிலாளர்,சினிமா தொழிலாளர்களின் 1 ஆம் வகுப்பு முதல் தொழில் முறை படிப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி 2024-25 ஆம் நிதியாண்டில் ரூ.1,000 முதல் ரூ.25,000 வரை கல்வி உதவித்தொகை பெறுவதற்கு https//scholarships.gov.in என்ற ஆன்லைன் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.

https//scholarships.gov.in என்ற வலைத்தளத்தில் பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்களை OTR மூலம் மாணவர்கள் சமர்ப்பிக்க வேண்டும்.உதவித்தொகை பெற உள்ள மாணவர்கள் முதலில் இந்த இணைய தளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.பின்னர் தாங்கள் கல்வி பயிலும் நிறுவனத்தின் பதிவு செய்யப்பட்ட முகவரியில் இருந்து விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.இத்திட்டத்திற்கு செய்ய அக்டோபர் 31 இறுதி நாளாகும்.

தேவைப்படும் ஆவணங்கள்:

1)ஆதார் எண்
2)சேமிப்பு வங்கி கணக்கு எண்

மேலும் இத்திட்டம் தொடர்பாக கூடுதல் விபரங்கள் பெற மத்திய நல ஆணையர் அலுவலகம், தொழிலாளர் நல அமைப்பு,தரைத்தளம், சிட்கோ நிர்வாக கிளை அலுவலக வளாகம், திரு.வி.க.தொழில் பூங்கா கிண்டி,சென்னை 600032 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

மின்னஞ்சல் முகவரி: [email protected]

தொலைபேசி எண்: 044-29530169