இவர்களின் ரேஷன் அட்டை இனி செல்லாது! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!
இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு தேவையான உணவு தானியங்களைப் பெற ரேஷன் அட்டை வழங்கப்பட்டுள்ளது. அதன் மூலம் பொது மக்களுக்கு பல்வேறு விதமான உதவிகளும் கிடைத்து வருகின்றது. வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு உணவு பாதுகாப்பதை வழங்குவதே இந்த திட்டத்தின் நோக்கமாக உள்ளது.
உணவுப் பொருட்கள் மட்டும் அல்லாமல் எண்ணற்ற பயன்களும் கிடைக்கின்றது. இந்நிலையில் தகுதியற்ற ரேஷன் கார்டுதாரர்களுக்கு எதிராக அரசு சார்பில் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது. அதன் அடிப்படையில் ஹரியானா அரசு கடந்த காலங்களில் ஒன்பது லட்சம் ரேஷன் கார்டுகளை ரத்து செய்துள்ளது.
மேலும் அதே நேரத்தில் 12 லட்சம் புதிய ரேஷன் கார்டுகளும் வழங்கப்பட்டுள்ளதாக மாநில முதல்வர் மனோகர்லால் கட்டார் தகவல் தெரிவித்துள்ளார் . மேலும் ரேஷன் கார்டு ரத்து செய்யப்பட்ட மக்களின் மூன்று லட்சம் பேர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாதவர்கள். மேலும் சுமார் 80 ஆயிரம் பேர் அரசு ஊழியர்கள். பிரதான் மந்திரி கரிப் கல்யாண் யோஜனா திட்டம் மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தத் திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் 80 கோடி பேருக்கு இலவச ரேஷன் கார்டு வழங்கப்படுகிறது. இது தவிர பல மாநில அரசுகளும் ஏழைகளுக்கு ரேஷன் வழங்கி வருகிறது. ரேஷன் வழங்க காடுதாரர்கள் சில நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும். அந்த நிபந்தனையில் தகுதி இல்லாதவர்கள் கூட ரேசனை பயன்படுத்த கொள்வதாக கடந்த சில நாட்களாக செய்தி பரவி வருகிறது. தற்போது அரசு தகுதியற்றவர்களின் காடுகளை நீக்க தொடங்கியுள்ளது.மேலும் அவர்களின் காடுகள் ரத்து செய்யப்பட்டு வருகிறது.