தமிழகத்தில் உள்ள ஆசிரியர்கள் ஒருவருக்கு தங்களுடைய பணி ஓய்வுக்குப் பிறகான பென்ஷன் திட்டம் கடந்த ஆட்சிக்காலத்தில் நிறுத்தப்பட்டது. இதனால் ஆசிரியர்கள் அதிர்ச்சிக்கு உள்ளானார்கள். அதோடு நிறுத்தப்பட்ட பென்ஷன் திட்டத்தை மறுபடியும் அமல்படுத்த வேண்டும் என்று தெரிவித்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினார்கள், ஆனாலும் அப்போதைய அதிமுக அரசு இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
இந்தநிலையில், சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபை பொதுத் தேர்தலில் திமுக தன்னுடைய தேர்தல் அறிக்கையில் திமுக ஆட்சிக்கு வந்தால் ஆசிரியர்களின் பென்சன் திட்டம் மீண்டும் கொண்டு வரப்படும் என்று தெரிவித்திருந்தது, அதனை நம்பி ஆசிரியர்களும் மற்றும் அரசுத் துறைகளில் இருக்கின்ற ஊழியர்களும், திமுகவிற்கு வாக்களித்து வெற்றி பெற செய்தார்கள்.
இந்த நிலையில், திமுக ஆட்சி பொறுப்பேற்று சுமார் 6 மாத காலங்கள் ஆகி விட்ட சூழ்நிலையிலும் கூட இது தொடர்பாக எந்த ஒரு முடிவும் எடுக்கப்படவில்லை. திமுக ஆட்சிக்கு வந்த உடனேயே இந்த திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று தெரிவித்து ஆசிரியர்கள் போராட்டத்தில் இறங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சூழ்நிலையில், தமிழ்நாட்டில் இருக்கின்ற பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு மகேஷ் பொய்யாமொழி தெரிவித்திருக்கிறார். தற்சமயம் தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகின்றது இதன் காரணமாக, மழை பாதிப்பு அதிகம் இருக்கக்கூடிய பகுதிகளில் தொடர்ச்சியாக செயல்படாமல் விடுமுறையில் இருக்கின்றன.
இந்த சூழ்நிலையில், பொதுத் தேர்வை மாணவர்கள் எந்தவிதமான பயமும் இல்லாமல் எழுதுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும், பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் எனவும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியிருக்கிறார்.
இதுகுறித்து பத்திரிக்கையாளர்களை சந்தித்து உரையாற்றிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பொதுத்தேர்வில் மாணவர்கள் எந்தவிதமான தயக்கமும் இன்றி எதிர்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்படும், அந்த விதத்தில் மாணவர்களுடைய பயத்தை போக்குவதற்கு அரையாண்டு மற்றும் முழு ஆண்டு தேர்வு க்கு பதிலாக ஜனவரி மார்ச் உள்ளிட்ட மாதங்களில் மாதிரித் தேர்வுகள் நடத்தப்படும் என தெரிவித்திருக்கிறார்.
பகுதிநேர ஆசிரியர்கள் படிப்படியாக பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் அதற்கான நடவடிக்கையை முதலமைச்சர் மேற்கொள்வார் என்று தெரிவித்திருக்கிறார் அமைச்சர்.
இதுதொடர்பாக பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தின்போது பகுதி நேர ஆசிரியர்களை நிரந்தரம் செய்வதாக திமுக வின் சார்பாக தேர்தல் அறிக்கையில் உறுதி அளிக்கப்பட்டிருந்தது.
பள்ளிக்கல்வி துறையில் சென்ற பத்து வருட காலங்களில் பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் கேட்டு பலவிதத்தில் கோரிக்கை வைத்து வருகின்றோம் என்றும், இது வரையில் தொகுப்பூதியத்தில் தான் நாங்கள் பணிபுரிந்து வருகிறோம் இவ்வாறு பணிபுரிந்து வரும் சூழ்நிலையில், பலருக்கு 40 வயது முதல் 55 வயது வரையில் ஆகிவிட்டது. அவர்கள் வேறு எந்தவிதமான பணிக்கும் செல்ல இயலாத சூழ்நிலையும் ஏற்பட்டிருக்கிறது என தெரிவித்திருக்கிறார்.
இப்படி பணி புரிந்து வருகின்ற பகுதிநேர ஆசிரியர்களின் வாழ்வாதாரம் மிகப்பெரிய பாதிப்பில் உள்ளது, எங்களை காலமுறை ஊதியத்தில் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தர கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என பலமுறை கோரிக்கை வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.