THEMAL HOME REMEDIES: “வெற்றிலை + துளசி” இருந்தால் தேமலை அசால்ட்டாக நீக்கலாம்!! 

Photo of author

By Rupa

THEMAL HOME REMEDIES: “வெற்றிலை + துளசி” இருந்தால் தேமலை அசால்ட்டாக நீக்கலாம்!!

தேமல் பாதிப்பு பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்படுகிறது.குறிப்பாக இளம் பருவத்தினர் தேமல் பாதிப்பு அதிகளவில் ஏற்படுகிறது.கை,கால்,முகம்,கழுத்து,மார்பு,முதுகு உள்ளிட்ட இடங்களில் வெள்ளை மற்றும் கருமை நிறத்தில் தேமல் உருவாகிறது.

இந்த தேமல் பாதிப்பு அதிகமாகாமல் இருப்பதற்கும்,அதை விரைவில் குணமாக்கி கொள்வதற்கும் இந்த வீட்டு வைத்தியங்கள் உதவும்.

1)வெற்றிலை
2)கருந்துளசி
3)மஞ்சள் தூள்
4)பூண்டு
5)தேங்காய் எண்ணெய்

ஒரு வெற்றிலையை அரைத்து சாறு எடுத்துக் கொள்ளவும்.பிறகு சிறிதளவு கருந்துளசி,4 பல் தோல் நீக்கிய பூண்டு மற்றும் 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூளை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்க்கவும்.

பிறகு வெற்றிலை சாற்றை அதில் கலந்து பேஸ்ட் பதத்திற்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 100 மில்லி சுத்தமான தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.

பிறகு அரைத்த விழுதை அதில் போட்டு வதக்கி எடுக்கவும்.இந்த பேஸ்டை ஆறவிட்டு தேமல் மீது பூசி வந்தால் சில தினங்களில் எதிர்பார்த்த பலன் கிடைக்கும்.

1)குப்பைமேனி இலை
2)மஞ்சள் தூள்

ஒரு கைப்பிடி குப்பைமேனி இலையை தண்ணீரில் அலசி சுத்தப்படுத்திக் கொள்ளவும்.பிறகு அதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன் சிறிது மஞ்சள் சேர்த்து அரைத்து தேமல் மீது அப்ளை செய்து வந்தால் சில வாரங்களில் அவை மறைந்துவிடும்.

1)மஞ்சள்
2)வேப்பிலை

ஒரு கைப்பிடி வேப்பிலையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து தேமல் மீது பூசி வந்தால் நீங்கள் எதிர்பார்த்த பலன் கிடைக்கும்.

1)கற்றாழை ஜெல்
2)மஞ்சள் தூள்

பிரஸ் கற்றாழை ஜெல்லில் சிறிது கஸ்தூரி மஞ்சள் பொடி சேர்த்து கலந்து தேமல் மீது தடவி வர சில தினங்களில் அவை குணமாகிவிடும்.

1)வெற்றிலை
2)பூண்டு

இந்த இரண்டு பொருட்களையும் சம அளவு எடுத்து அரைக்கவும்.பிறகு இதில் இருந்து கிடைக்க கூடிய சாற்றை தேமல் மீது பூசினால் நல்ல பலன் கிடைக்கும்.