தேனி மாவட்டத்தில் அண்மைக்காலமாக குழந்தை திருமணங்கள் மற்றும் பள்ளி பருவ காதல் பாலியல் குற்றங்கள், என்று குழந்தைகள் குறித்த பல்வேறு குற்ற சம்பவங்கள் நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது.
குழந்தை திருமணம் மற்றும் குழந்தைகளுக்கு உண்டாகும் மன ரீதியான பிரச்சனைகளை கட்டுப்படுத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் சார்பாக பல்வேறு விழிப்புணர்வு மற்றும் அறிவுரைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.
தேனி மாவட்டம் கம்பம் பகுதியிலிருக்கின்ற அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உத்தமபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையம் சார்பாக பள்ளி குழந்தைகளுக்கு குழந்தை திருமணம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.
கம்பம் பகுதியிலிருக்கின்ற பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளியில் சுமார் 1000ற்கும் அதிகமான குழந்தைகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளியில் குழந்தை திருமணத்தினால் உண்டாகும் சிக்கல்கள், அதுதொடர்பாக ஏற்படும் பின்விளைவுகள் தொடர்பாகவும், குழந்தை திருமணம் தவறு என்பதையும் காவல்துறை அதிகாரிகள் பள்ளி குழந்தைகளுக்கு எடுத்துரைப்பதற்காக ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதோடு பள்ளி பருவ காதல் காரணமாக, உண்டாகும் சிக்கல்கள் பள்ளி குழந்தைகள் கைபேசியில் மூழ்கி இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பயன்படுத்துவதால் உண்டாகும் சிக்கல்களும், அதன் பின்விளைவுகள் தொடர்பாகவும், விவரிக்கப்பட்டது.
நாள்தோறும் மகளிர் காவல் நிலையத்திற்கு வரும் குழந்தைகள் குறித்த வழக்குகள் தொடர்பாக உத்தமபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையம் சார்பு ஆய்வாளர் முனியம்மாள் விளக்கமாக எடுத்து தெரிவித்தார்.
அதனையடுத்து கம்பம் போக்குவரத்து சார்பு ஆய்வாளர் நேரு பள்ளி குழந்தைகள் போக்குவரத்து விதிகளை கடைபிடிப்பது தொடர்பாகவும், போக்குவரத்து விதிகளை மீறாமல் செயல்படுவது தொடர்பாகவும், எடுத்துரைத்தார்.இதனை குழந்தைகள் அனைவரும் ஆர்வத்துடன் கேட்டறிந்தார்கள்.