ஆடாதொடை இலை தீர்க்காத நோய்களே இல்லை!! ஆடாதொடையின் பிரம்மிப்பூட்டும் மருத்துவ பயன்கள்!!

0
399
#image_title

ஆடாதொடை இலை தீர்க்காத நோய்களே இல்லை!! ஆடாதொடையின் பிரம்மிப்பூட்டும் மருத்துவ பயன்கள்!!

ஆடாதோடை இலை பொதுவாக இருமல், சளி மற்றும் தொண்டைக் கட்டுக்கு அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த இலைகளில் அல்கலாய்டு என்ற வேதிப்பொருள்கள் இருப்பதால் நுரையீரல் சம்மந்தமான பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது. ஆடாதோடின், வைட்டமின் சி, கேலக்டோஸ், டானின், அல்கலாய்டுகள் போன்ற வேதிப்பொருள்கள் உள்ளன.

மேலும் டெங்கு ,மலேரியா சுரம் போன்ற காய்ச்சலுக்கு இந்த இலைகள் சிறந்த பலனை கொடுத்து அந்த காய்ச்சலால் குறையும் ரத்த தட்டணுக்களின் எண்ணிக்கையை உயர்த்தும் . மேலும் பெண்களுக்கு மாதவிடாய் ரத்தப்போக்கையும் ,மூல நோயால் உண்டாகும் ரத்த போக்கையும் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது . மூலிகைகளில் மிக முக்கியமானது ஆடா தோடை.

ஆடாதோடை சூப் வைத்துக் குடித்து வந்தால் ஆயுள் அதிகரிக்கும். மனிதர்களுக்கு நோயாக வாழ்விற்கு நல்ல சுவாசம் தீர்ப்பாக இருக்கும். நுரையீரல் அப்படின்னு சொல்றது மனித சுவாச மூலம் வரக்கூடிய காற்றிலிருந்து ஆக்சிஜனைப் பிரித்து உடலில் வைத்து கரைத்து வெளியேற்றும்.

ஆடாதோடை இலையை எடுத்து அதன் காம்புகளையும் நரம்புகளையும் நீக்க வேண்டும். இலைகளை மண் போக சுத்தம் செய்து, பொடியாக அரிந்து ஒரு கிலோவிற்கு 5 லிட்டர் தண்ணீர் ஊற்றி இலைகளை கஷாயம் போல் காய்ச்சவும். நீரானது நன்றாக சுண்டி ஒரு லிட்டர் அளவுக்கு வரும் போது இலைபதம் வெந்து தண்ணீரோடு குழைந்து இருக்கும்.

இதன் இலைச்சாறு 2 தேக்கரண்டி எடுத்து எருமைப்பால் 1 டம்ளரில் கலந்து 2 வேளை குடித்து வர, சீத பேதி, இரத்த பேதி குணமாகும். இதன் இலை 10 எடுத்து 1 லிட்டர் நீரில் போட்டு 1 லிட்டராகக் காய்ச்சி வடிகட்டி தேன் கலந்து 2 வேளை 48 நாட்கள் குடித்து வர, என்புருக்கி காசம் இரத்த காசம், சளிக் காய்ச்சல், சீதளவலி, விலாவலி நீங்கும்.

இருமலை போக்க முன்னோர்கள் அதிகம் பயன்படுத்தியது இந்த ஆடாதொடை மூலிகை தாவரத்தைதான். ஆடாதோடையைக் கண்டால் பாடாத நாவும் பாடுமே சித்த மருத்துவத்தில் சளி, இருமல், நுரையீரல் நோய், இரத்த அழுத்தம், ஆஸ்துமா, காச நோய் வரை ஆடாதோடையை பயன்படுத்துகிறார்கள்.

Previous articleஇதை மட்டும் சாப்பிடுங்கள் இனி பரம்பரைக்கே சர்க்கரை வியாதி வராது!!
Next articleநரம்பு சுருள் பிரச்சனையில் இருந்து விடுதலையாக இந்த ஒற்றை கசாயம் போதும்!!