இனிமே இதற்கு கட்டணங்கள் இல்லை! முதல்வர் அறிவிப்பு!

0
153
There are no fees for this anymore! Chief Announcement!
There are no fees for this anymore! Chief Announcement!

இனிமே இதற்கு கட்டணங்கள் இல்லை! முதல்வர் அறிவிப்பு!

இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் “ கொரோனாவை கட்டுப்படுத்தவும், சிகிச்சை வசதிகளை மேம்படுத்தவும் தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இதனிடையே பிறப்பு / இறப்பு குறித்து 21 நாட்களுக்கு சம்மந்தப்பட்ட பதிவாளரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும். இறப்பு ஏற்பட்ட பின் அதாவது 21 நாட்களுக்கு மேல் 30 நாட்கள் வரை காலதாமதக் கட்டணம் ரூ 100/- ஆகவும், 30 நாட்களுக்குப் பின் ஓராண்டிற்குள் காலதாமதக் கட்டணம் ரூ 200/-ஆகவும், ஓராண்டிற்கு மேல் காலதாமதக் கட்டணம் ரூ.500/- ஆகவும் உள்ளது.

மக்கள் கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் இந்த சூழலில் இந்தக் கட்டண முறையானது ஒரு சுமையை ஏற்படுத்தி வருவது முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.. இதனை பரிசீலித்த முதல்வர் இக்கட்டணத்திலிருந்து பொது மக்களுக்கு விலக்களிக்கவும். அந்தக் காலதாமதக் கட்டணத்தை அரசே ஏற்றுக்கொள்ளும் என்று அறிவித்துள்ளார்.

அந்த வகையில் இந்த கொரோனா பெருந்தொற்று காலகட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளில்/ கிராமங்களில் முதல் நிகழ்ந்த பிறப்பு / இறப்பு குறிந்த காலந்தாழ்வு பதிவு விண்ணப்பங்களுக்கு பிறப்பு இறப்பு விதிகளில் வரையறுக்கப்பட்ட காலதாமத கட்டணம் வசூலிக்கப்படுவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

மக்கள் இந்த பெரும் தொற்று காலத்தில் மிகுந்த பாதிப்புகளுக்கு உள்ளவதால், இனி அரசே இதை செலுத்தி கொள்ளும் என தெரிவித்ததில் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பிறப்பு இறப்பு சான்றிதழ் என்பது நாம் அனைவருக்கும் எவ்வளவு அவசியம் என நாம் அனைவரும் அறிந்ததே.

Previous articleதிருமணம் தொடர்பான சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை அஞ்சலி!
Next articleராஷ்மிகா வுக்கு கிடைத்த அரிய வாய்ப்பு! அடுத்த திரைப்படம் இவருடன் தான்!