PMK: அன்புமணி ராமதாஸ் மற்றும் ராமதாஸ் இருவருக்கும் இடையே கட்சி தலைமை குறித்து மோதல் இருந்து வருகிறது. அதிலும் ராமதாஸ் அவர்கள் மீண்டும் நானே தான் தலைவர் என்று கூறிய போதிலும், அதனை அவரது மகன் ஏற்கவில்லை. அவரும் ஒரு பக்கம் நான் தான் தலைவர் என்று அறிக்கை வெளியிட்டார். இப்படி இருவரும் மாறி மாறி கட்சி தலைமைக்கு போட்டியிட்டு வருவது நிர்வாகிகள் மத்தியில் முகம் சுளிக்க வைக்கிறது.
இதற்கு அடுத்த கட்ட பிரச்சனையாக யாருடன் கூட்டணி வைப்பது என்பது குறித்து தான் போட்டி நிலவுகிறது. அதாவது அதிமுக மற்றும் பாஜக இருவருடனும் கூட்டணி வைத்து எந்த பயனுமில்லை இதனால் திமுகவுடன் கூட்டணி வைக்கலாம் என்பதை ராமதாஸ் வலியுறுத்தி வருகிறார். ஆனால் இதனை அன்புமணி முற்றிலும் மறுப்பு தெரிவித்து பாஜகவுடன் கூட்டணி வேண்டும் அப்போதுதான் எனக்கு மீண்டும் எம்பி சீட் கிடைக்கும் என்கிறாராம்.
ஆனால் ராமதாஸ் அன்புமணி கூறுவதை துளி கூட ஏற்காமல், மகனுக்கு பதில் மகளின் பேரனை வைத்து கட்சியை பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணி வருகிறாராம். அதனால் தான் இது என் கட்சி நான் சொல்வதை தான் கேட்க வேண்டும் என்று கரார் காட்டுகிறார். அப்படி அன்புமணி கட்சியை விட்டு விலகும் பட்சத்தில் பாஜக அல்லது தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி வைக்க நேரிடும் என்கின்றனர் நன்கு தெரிந்த அரசியல் வட்டாரங்கள். மேலும் அன்புமணிக்கு ஆதரவாக பலர் பாமக வை விட்டு வெளியேறலாம் என்றும் கூறுகின்றனர்.