ADMK TVK: தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலானது அனைத்து கட்சியினருக்கும் மிகப்பெரிய சவாலாகத் தான் இருக்கும். எப்பொழுதும் அதிமுக திமுக என்று மாறி மாறி ஆட்சி அமைத்த நிலையில் தற்போது தவெக உள் நுழைந்துள்ளது. இதர மாற்று கட்சியினர் புதிதாக வந்த பொழுது கூட இவ்வளவு வரவேற்பு கிடையாது. ஆனால் விஜய்க்கு இளைஞர்களிடையே நல்ல பலம் உள்ளது. இதை அவர் நடத்திய முதல் மாநாட்டிலேயே அறிய முடிந்தது. இதனால் ஆளும் கட்சி சற்று அச்சத்தில்தான் உள்ளது.
ஏனென்றால் விஜய்யின் முதற்கட்ட நோக்கமே திமுகவின் கூட்டணி கட்சியை உடைப்பது தான். அதன்படி திமுகவின் கூட்டணிகள் தவெக பக்கம் சாய்ந்து விடுமோ என்று எண்ணுகின்றனர். இவ்வாறு இருக்கும் போது மற்றொரு பக்கம் தமிழக வெற்றிக் கழகம் அதிமுகவுடன் கூட்டணி வைக்க அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. ஆனால் இது அதிமுகவினர், தொண்டர்களை சமாதானப்படுத்த இப்படி கூறி வருகிறார்களாம். சமீபத்தில் விஜய் அரசியல் வியூக அமைப்பாளரான பிரசாந்த் கிஷோருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
அதில் விஜய்க்கு பல அட்வைஸ்கள் கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நீங்கள் அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டுமென்றால் சட்டமன்றத் தேர்தலில் பாதிக்கு பாதி சீட் கேட்க வேண்டும். அதேபோல இரண்டு வருட ஆட்சி காலம் உங்களது என்றும், அடுத்த இரண்டு வருடம் அவர்களது என்றும் பேச்சுவார்த்தை நடத்தும் படி கூறியுள்ளார். மேற்கொண்டு மேஜர் அத்தாரிட்டி எப்பொழுதும் நீங்களாக தான் இருக்க வேண்டும், இல்லையென்றால் பாஜகவை போல் பின்னோக்கியே இருந்து விடுவீர் என்று அறிவுறுத்தியுள்ளாராம்.
ஆனால் இந்த விதிமுறைகள் ஏதும் அதிமுகவிற்கு பொருந்தவே பொருந்தாது. பல ஆண்டுகளாக தமிழகத்தில் ஆட்சி அமைத்து வரும் நிலையில் புதிதாக வந்த கட்சிக்கு இவ்வளவு ஆதரவு கொடுத்தால் இதர கூட்டணி கட்சிகளை சமாளிப்பது இயலாத ஒன்று என யோசித்து வருகிறார்களாம். இதனால் தவெக போடும் விதிமுறைகளை அதிமுக அனுசரிப்பது சற்று கடினம் தான் என அரசியல் வட்டாரத்தில் கூறி வருகின்றனர்.