Donald Trump: அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றதிலிருந்து பொருளாதார ரீதியாக பல நாடுகளுக்கும் சாதகமாகவும் பாதகமாகவும் பல அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. மேலும் அமெரிக்காவிலிருக்கும் இந்தியர்களுக்கு வலது சாரியை எதிர்த்து பல பயன் தரும் அறிவிப்புக்களை வெளியிட்டிருக்கிறார். அந்த வகையில், எங்கள் நாட்டிற்கு ஏற்றுமதி மற்றும் இறக்கும் மதிப்பு எந்த அளவில் வரி வசூல் செய்கிறீர்களோ அதே போல நாங்களும் செய்வோம் என்ற எச்சரிக்கை ஒன்றை விடுத்திருந்தார். அந்த வரிசை பட்டியலில் இந்தியாவும் இருந்தது.
தற்போது இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கான விதியை 26 சதவீதமாக நிர்ணயித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோல பல்வேறு புதிய அறிவிப்புக்களும் அவ்வ போது வெளியாகிறது. இப்படி இருக்கையில் ட்ரம் தலைமையில் உள்ள நிர்வாகத்திலிருந்து எலான் மஸ்க் வெளியேறப் போவதாக தகவல்கள் கசிந்துள்ளது.
எலான் மஸ்க் அரசின் செயல் திறன் துறைக்கு நிர்வாகியாக ட்ரம்ப் நியமனம் செய்திருந்தார். இவர் பதவி வகித்ததும் அமெரிக்காவிற்கு கிட்டத்தட்ட ஒரு பில்லியன் டாலர் லாபமடைந்ததாக தகவல்கள் வெளியானது. ஆனால் இவர் இந்த அரசாங்க வேலையை பார்த்து வந்தால் கட்டாயம் இவர் தொழில் சார்ந்து கவனம் செலுத்த முடியாமல் போகலாம். இதனால் அமைச்சரவையிலிருந்து விலகப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது ரீதியாக தற்பொழுது வரை அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியாகவில்லை.
ஆனால் ட்ரம்ப் இது ரீதியாக தனது இணைக்கமாக உள்ளவர்களிடம் ஆலோசனை செய்து வருவதாகவும் எலான் மஸ்க் இல்லையென்றால் யார் அந்த இடத்திற்கு பொருத்தமாக இருப்பார் என்றும் ஆராய்ந்து வருகிறாராம்.