ADMK TVK: தமிழக அரசியலில் அடுத்தடுத்த திருப்பமாக புது அறிவிப்புகள் அவ்வப்போது வெளியாகி வருகிறது. தற்சமயம் அதிமுக பாஜக கூட்டணி குறித்து தான் எங்கு பார்த்தாலும் பேச்சு அடிபட்டு வருகிறது. அண்ணாமலை கட்சியை விட்டு வெளியேறினால் மீண்டும் கூட்டணி வைத்துக் கொள்ளலாம் என்ற கெடுபிடியை பாஜக மேலிடத்திற்கு எடப்பாடி போட்டுள்ளார். முதலில் ஒப்புக்கொள்ளவில்லை என்றாலும் நாளடைவில் கட்சியின் நலனுக்காக சம்மதித்து விட்டனர்.
இது ஒரு பக்கம் இருக்க மற்றொரு பக்கம் விஜய்க்கு இது பாதகமாகவே அமைந்துள்ளது. இனி எந்த ஒரு கட்டாயத்திலும் பாஜகவுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என அதிமுக சொன்னதை வைத்து தமிழக வெற்றிக் கழகம் தொடர்ந்து எடப்பாடியுடன் கூட்டணிக்காக பேச்சுவார்த்தை நடத்தி வந்துள்ளனர். ஆனால் தொகுதி பிரிவு ஆட்சி அமைத்தல் போன்ற பிரச்சனையினால் இவர்கள் பேச்சுவார்த்தை பாதியிலேயே நின்றது. இருப்பினும் விஜய் விட்டுக் கொடுக்காது மற்ற கட்சிகளை குறித்து குறை கூறினாலும் அதிமுக குறித்து ஒருபோதும் வாய் திறப்பதில்லை.
அதேபோல தேர்தல் நெருங்கும் சமயத்தில் கட்டாயம் அதிமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி வைத்து விடும் என்ற பேச்சும் அடிபட்டு வந்தது. ஆனால் இன்றைய அரசியல் சூழலில் பாஜகவுடன் அதிமுக மீண்டும் கூட்டணியில் இணைய போவது உறுதியாகி இருக்கிறது. இதனால் விஜய் யாருடன் கூட்டணி வைக்க போகிறோம் என்பது குறித்து குழப்பத்தில் உள்ளாராம். சீட் பிரிப்பது குறித்தும் எங்கள் தலைமையின் கீழ் தான் ஆட்சி அமைய வேண்டும் என்பதிலும் தீர்க்கமாக இருந்ததால் அதிமுக கூட்டணி கைநழுவி போனது.
அரசியலுக்குள் வந்த உடனே முதல்வராக நினைத்து எங்களுக்கு கீழ் தான் ஆட்சி எனக் கூறினால் தற்போது வரை எதிர்க்கட்சியாக இருந்த அதிமுகவிற்கு எந்த மவுசும் இருக்காது. அதனை விட்டுக் கொடுக்க முடியாமல் தான் அதிமுக மீண்டும் பாஜக வை தேடி சென்றது. இதனையெல்லாம் விஜய் தற்பொழுது ஆலோசனை செய்து வருகிறாராம். மேற்கொண்டு வேறு யாருடன் கூட்டணி வைப்பது என்பதறியாமல் குழப்பத்தில் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.