உலகத்தில் இரண்டு விதமான வலிகள் இருக்கின்றன!! முன்னாள் CSK வீரர் டுவீட்!!

Photo of author

By Sakthi

உலகத்தில் இரண்டு விதமான வலிகள் இருக்கின்றன!! முன்னாள் CSK வீரர் டுவீட்!!

Sakthi

There are two kinds of pain in the world!! Former CSK Player Tweet!!
உலகத்தில் இரண்டு விதமான வலிகள் இருக்கின்றன!! முன்னாள் CSK வீரர் டுவீட்!!
உலகத்தில் இரண்டு விதமான வலிகள் உள்ளது என்று முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரரும், இந்திய அணியின் முன்னாள் வீரருமான சுரேஷ் ரெய்னா அவர்கள் தெரிவித்துள்ளார். உடற்பயிற்சி மையத்தில் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை பகிர்ந்த அவர் இந்த கருத்தை பதிவிட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியில் முக்கியமான பேட்ஸ்மேனாக இருந்தவர் சுரேஷ் ரெய்னா. இந்தியா உலகக் கோப்பை வென்ற பொழுதும், சேம்பியன்ஸ் டிராபி வென்ற பொழுதும் தோனி தலைமையிலான இந்திய அணியில் இவர் விளையாடினார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக  பலமுறை இவர் சிறப்பாக விளையாடியுள்ளார். ரசிகர்கள் அனைவரும் இவரை அன்புடன் சின்னத் தல என்று அழைப்பார்கள். இவர் அனைத்து விதமான சர்வேதச போட்டிகளிலும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளிலும் ஓய்வு பெற்றுவிட்டார். இருந்தும் இவர் உடற்பயிற்சி செய்து உடலை பிட்னஸாக வைத்துக் கொள்வதில் ஆர்வம் மிகுந்தவர்.
இந்த நிலையில் உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சி செய்யும் வீடியோவை டுவிட்டரில் பகிர்ந்த சுரேஷ் ரெய்னா அவர்கள், “உலகத்தில் இரண்டு விதமான வலிகள் உள்ளன. ஒரு வலி உங்களை காயப்படுத்தும். மற்றொரு வலி உங்களை மாற்றும்” என்று பதிவிட்டுள்ளார். இவரது இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது.  ரசிகர்களை ஊக்கப்படுத்தும் சுரேஷ் ரெய்னா அவர்களின் இந்த கருத்து அனைவருடைய கவனத்தையும் ஈர்த்து வருகின்றது.