Pushpa-2: புஷ்பா-2 திரைப்படத்தில் காவல் துறையினரை இழிவாக சித்தரிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகி மிகப் பெரிய ஹிட் ஆனா திரைப்படம் புஷ்பா-1 இந்த படத்தின் இரண்டாம் பாகம் இந்திய அளவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படம் ஆகும். இந்த படம் வெளியாகி 15 நாட்களுக்குள் 1500 கோடியை வசூல் செய்தது. இந்த படம் செம்மரக் கட்டை திருடி விற்பவர்களுக்கு அதை தடுக்கும் போலிசார்களுகும் இடையே நடக்கும் திரைக்கதையாக அமைய பெற்று இருக்கிறது.
இந்த நிலையில் செம்மரம் கட்டை திருடி விற்கும் நபராக படத்தில் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கும் அல்லு அர்ஜுன் போலீசார் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கும் பகத் ஃபாசில் மீது சிறுநீர் கழித்து அவமானப் படுத்துவது போன்ற காட்சி இடம் பெற்று இருக்கிறது. காவல்துறையினரை தாக்கும் வகையில் சித்தரிக்கும் புஷ்பா படக்குழுவினர் இயக்குனர் சுகுமார் மற்றும் நடிகர் அல்லு அர்ஜுன் நடவடிக்கை எடுக்க தெலுங்கானா காங்கிரஸ் மூத்த தலைவர் எம்.எல்.சி.யுமான தேன்மார் மல்லண்ணா அவர்கள் மெடிபள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதற்கு முன், புஷ்பா-2 இந்த திரைப்படத்தை பார்க்க வந்த ரசிகை ஒருவர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த விவகாரம் தெலுங்கானாவில் பூகம்பமாக வெடித்து இருக்கிறது. ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சியினர் மாறி காவல்துறை மற்றும் புஷ்பா திரைப்படக் குழுவினர் மீது குற்றச்சாட்டு முன் வைத்து வருகிறார்கள்.