பாமக -வுக்கு திமுக செய்த துரோகத்தை மறந்த கனிமொழி.. வல்லபாய் படேலின் சிலை பேச்சால் வந்த நெருக்கடி!!

0
5
There has been opposition to Kanimozhi speech regarding the installation of a statue of Vallabhbhai Patel
There has been opposition to Kanimozhi speech regarding the installation of a statue of Vallabhbhai Patel

PMK DMK: நாடாளுமன்ற கூட்டுத்தொடரில் கனிமொழி கலந்துக்கொண்டு தமிழகம் சார்ந்த பிரச்சனைகளை பேசி வருகிறார். குறிப்பாக மத்திய அரசு தங்களின் எதிர்கட்சிகளின் மீது அமலாக்கத்துறை, வருவாய்த்துறை என அனுப்பி பழி வாங்கிய நிலையில் தற்போழுது அதனை மாற்றி ஆளுநரை பயன்படுத்துவதாக சுட்டிக்காட்டினார். ஆனால் மத்திய அரசை குறை கூறும் எம்பி தனது கட்சியில் என்ன நடக்கிறது என்பதை மறந்துவிட்டார் போல, தாங்களும் காவல்துறையை வைத்தே பல பஞ்சாயத்துக்களை செய்து வருகின்றனர்.

குறிப்பாக எந்த ஒரு போராட்டமாக இருந்தாலும் மூன்று நாட்களுக்கு முன்னதாக அனுமதி பெற வேண்டும் என கூறிய திமுக, தனது கட்சி போராட்டத்திற்கு மட்டும் உடனடி அனுமதி கொடுத்தது எப்படி என்று தான் தெரியவில்லை. அதேபோல கனிமொழி நாடாளுமன்றத்தில் வல்லபாய் படேலுக்கு 3000 ஆயிரம் கோடி ரூபாயில் சிலை வைப்பதை விட அவரின் வார்த்தையை புரிந்துக் கொண்டு அதை செயல்படுத்துவதே அவருக்கு தரும் மறியாதை எனக் கூறியிருந்தார். ஆனால் பாமக இட ஒதுக்கீட்டு போராட்டத்தில் உயிரிழந்த 21 பேருக்கு மரியாதை செலுத்தும் வகையில் தமிழக அரசு மணி மண்டபம் கட்டியுள்ளது.

அதற்குமாறாக அவர்களை போற்றும் வகையில் இட ஒதுக்கீடு தானே அளித்திருக்க வேண்டும். ஆனால் தற்பொழுது வரை சாதிவாரி கணக்கெடுப்பை எடுக்காமல் மத்திய அரசு மீது தான் பழி போட்டு வருகின்றனர். பீகார் போன்ற ஓர் சில மாநிலங்களில் மத்திய அரசின் உதவி இல்லாமல் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி இருக்கும் பட்சத்தில் திமுக ஏன் அதை தவிர்த்து வருகிறது. இதெல்லாம் கனிமொழி க்கு தெரியவில்லையா என்று அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். மத்திய அரசுக்கு கூறும் அறிவுரையை முதலில் தாங்கள் தானே பின்பற்றிருக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் விமர்சனங்களை முன் வைத்துள்ளனர்.

Previous articleஅதற்கு நோ சொன்னேன்!! சிவகார்த்திகேயன் ஓபன் டாக்!!
Next articleவரைபடத்தில் மட்டும் இருந்தால் போதுமா!! மத்திய பட்ஜெட்டில் வேண்டாமா!!