இந்த “மவுத்வாஷ்” பயன்படுத்தினால் புற்றுநோய் வர 100% சான்ஸ் இருக்கு – மக்களே எச்சரிக்கை!!
தினமும் பற்களை துலக்கிட்டு வாயை சுத்தம் செய்ய மவுத்வாஷ் பயன்படுத்தும் பழக்கம் உங்களில் பலருக்கு இருக்கும்.சிலர் வாய் துர்நாற்றத்தை உணரும் போது மவுத்வாஷ் பயன்படுத்துவார்கள்.இதனால் வாய்க்கு ஒரு புத்துணர்வு கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.ஆனால் நாம் பயன்படுத்தும் மவுத்வாஷ் உயிருக்கு ஆபத்தான நோயான கேன்சரை உருவாக்கிவிடும் என்று உங்களில்க் எத்தனை பேருக்கு தெரியும்?
ஆம் பிரபல நிறுவனத்தின் கூல் மிண்ட் மவுத்வாஷை தொடர்ந்து 3 மாதங்களுக்கு பயன்படுத்தினால் வாயில் சில பாக்டீரியா இனங்கள் தோன்றி அவை கேன்சரை செல்களை உருவாக்கிவிடும் என்ற அதிர்ச்சி தகவல் பெல்ஜியத்தின் ஆண்ட்வெர்ப் இன்ஸ்டிடியூட் ஆப் ட்ராபிகில் மெடிசின் ஆய்வில் வெளியாகி இருக்கிறது.
மவுத்வாஷில் உள்ள ஃபுசோபாக்டீரியம் நியூக்ளியேட்டம் மற்றும் ஸ்ட்ரெப்டோகாக்கஸ் ஆஞ்சினோசஸ் ஆகியவற்றால் வாய்,தலை மற்றும் கழுத்து ஆகிய பகுதிகளில் தடையின்றி புற்றுநோய் வளர்வதற்கு வாய்ப்புகள் அதிகம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
உங்கள் மவுத்வாஷில் ஆல்கஹால் இருந்தால் அவற்றை தொடர்ந்து பயன்படுத்தும் பொழுது வாயில் வலி,எரிச்சல் உணர்வு,பல் கூச்சம் ஆகியவற்றை ஏற்படுத்தும்.எனவே உங்கள் வாய் சுவாசத்தை புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்ள இதுபோன்ற ஆபத்துகளை ஏற்படுத்தும் மவுத்வாஷை பயன்படுத்தாமல் சில எளிய மற்றும் ஆரோக்கிய வழிகளை பின்பற்றுவது நல்லது.
உணவருந்திய பின்னர் வெந்நீர் கொண்டு வாயை சுத்தம் செய்தல்,தினமும் இருமுறை பல் துலக்குதல் போன்றவற்றை செய்து வந்தாலே வாய் புத்துணர்வு பெறும்.