கொரோனாவை விட பெரும் தொற்று வருகின்றது! உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது!!

0
300
#image_title
கொரோனாவை விட பெரும் தொற்று வருகின்றது! உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது!
2019ம் ஆண்டில் சீனாவில் தொடங்கிய கோவிட்19 தொற்று உலகம் முழுவதும் பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தியது. இதன் தாக்கம் இன்று வரை உள்ளது. இதற்கு மத்தியில் கோவிட் 19 தொற்றை விட பயங்கரமான பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடிய நோய் தொற்று ஏற்படவுள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற உலக சுகாதார அமைப்பின் வருடாந்திரக் கூட்டத்தில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானம் கேப்ரியேசஸ் இந்த பெருந்தொற்று தொடர்பாக கூறியுள்ளார்.
உலக சுகாதார அமைப்பின் தலைவர் அந்த வருடாந்திர கூட்டத்தில் “கோவிட் 19 தொற்றைவிட பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடிய நோற் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்த பெருந்தொற்று பரவாமல் தடுப்பதற்கான ஆலோசனைக்கு  உலகநாடுகள் முன்னுரிமை கொடுக்க வேண்டும்” என்று கூறினார்.
மேலும் பேசிய உலக சுகாதார நிறுவனத் தலைவர் “கோவிட் பெருந்தொற்று உலகம் முழுவதும் 2 கோடி மக்களை உயிர்பலி வாங்கியுள்ளது. இந்த கோவிட் 19 தொற்றால் இனி எந்த பாதிப்பும் இல்லை என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்திருந்தாலும் இன்னும் கோவாட் 19 தொற்று முழுமையாக மறையவில்லை. புதிதாக ஏற்படும் இந்த பெருந்தொற்று கோவிட் தொற்றை விட பலமடங்கு உயிர் சேதங்களையும் உடல் பாதிப்புகளையும்.ஏற்படுத்தவுள்ளது. இதனால் அந்த பெரும்தொற்றை எதிர்கொள்ள உலகம் தயாராக வேண்டும்” என்றும் கூறினார்.
தொடர்ந்து பேசிய உலக சுகாதார நிறுவன தலைவர் “கொரோனா நோய் தொற்று ஏற்படும் பொழுது அதை எதிர்கொள்ள உலகம் தயாராக இல்லாததால் உலகம் முழுவதிலும் கோடிக் கணக்கான உயிர்ச் சேதங்களை ஏற்படுத்தியது. அடுத்து ஏற்படக்கூடிய புதிய நோய்த் தொற்றும் எளிமையாக வீழ்த்தக் கூடியது இல்லை. அந்த புதிய பெருந்ததொற்று நம் வீட்டு கதவை தட்டப் போகிறது. நாம் செய்ய வேண்டியதை செய்யாவிட்டால் பெரும் பாதிப்புகள் ஏற்படும். அதனால் இந்த பெரும் பாதிப்புகளை தடுக்க நாம் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செய்ய வேண்டும். இப்பொழுது செய்யாவிட்டால் இனி எப்பொழுது செய்யப் போகிறோம்?” என்று அவர் கூறியுள்ளார்.
Previous articleஇறுதிப் போட்டியில் தோனியை சந்திக்க விரும்புகிறேன்! குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் பேட்டி!!
Next articleகலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர 301466பேர் விண்ணப்பம்!!