தமிழகத்தில் குண்டு விழ அதிக வாய்ப்பு.. இந்த பகுதி தான் டார்கெட்!! சீனியர் கொடுத்த தகவல்!!

Photo of author

By Rupa

தமிழகத்தில் குண்டு விழ அதிக வாய்ப்பு.. இந்த பகுதி தான் டார்கெட்!! சீனியர் கொடுத்த தகவல்!!

Rupa

There is a high chance of bomb fall in Tamil Nadu.. People of this area be alert!! Information given by senior!!

India Pakistan: பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதரால் அப்பாவி மக்கள் 21 பேர் உயிரிழந்ததை அடுத்து பாகிஸ்தான் இதற்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை என்று கூறியது. ஆனால் இதனை உலக நாடுகள் முதல் யாரும் நம்பவில்லை. இதனையடுத்து இந்தியாவும் அவர்களுக்கு செல்லும் சிந்துநதி நீரை தடுத்து நிறுத்தியது. இதற்கு தக்க பதிலடி கொடுப்போம் என இரண்டு ஏவுகணை சோதனையை பாகிஸ்தான் நடத்தியுள்ளது.

இப்படி போர் மோதல் முற்றுவதற்கு ஏதுவான சூழல் அமைந்துள்ள நிலையில், நேற்று நாடு முழுவதும் போர்கால ஒத்திகை நிகழ்ந்தது. இதில் குறிப்பாக போர் நடக்கும் சமயத்தில் பொதுமக்கள் எப்படி தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் ராணுவ வீரர்கள் எந்த முறையை கையாள வேண்டும் என்றெல்லாம் கூறியுள்ளது. குறிப்பாக இந்தியாவில் பாதுகாக்கப் பட வேண்டிய இடங்களை அவர்களிடமிருந்து மறைத்து வைக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

இப்படி இருக்கையில் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி கர்ணன் கணேசன் இது குறித்து பேட்டி ஒன்று அளித்துள்ளார். அதில், இந்தியாவில் போர் என்று பேச்சு அடிபட்டாலே அது எல்லையில் தான் நடக்கும் என வழக்கமாக கூறுவதுண்டு. அப்படி கிடையாது, தற்பொழுது வளர்ந்துள்ள டெக்னாலஜியில் எங்கு வேண்டாமானாலும் குண்டு வெடிக்கலாம். ஏன் நாளைக்கு கூட தமிழகத்தில் குண்டு விழலாம், இந்த சமயத்தில் தங்களை எப்படி பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பது தெரிந்திருக்க வேண்டும்.

அதற்காகத்தான் இந்த நாடு தழுவிய போர் ஒத்திகை பயிற்சி நடைபெற்றுள்ளது. இது ரீதியாக மத்திய உள்துறை அமைச்சகம் ஒவ்வொரு மாநில அரசுக்கும் அறிவுறுத்தியுள்ளது. மருத்துவமனையில் போதுமான வசதி உள்ளதா? ஒரு கட்டிடம் விழுவதற்கு முன் மக்கள் தங்களை அங்கிருந்து எப்படி பாதுகாத்துக் கொள்ள வேண்டும்?? என்பதெல்லாம் முன்கூட்டியே அறிந்திருக்க வேண்டும்.

நமது தமிழகத்தை பொறுத்தவரை அணுமின் நிலையம் மிகவும் காப்பாற்றப்பட வேண்டிய ஒன்று. எதிரிகள் அதனை குறி வைத்து தாக்குதல் நடத்த அதிக வாய்ப்புள்ளது. எனவே அங்குள்ள மக்கள் சற்று எச்சரிக்கையாக இருப்பது நல்லது. காயமடையாத மக்கள் காயமடைந்தவர்களை காப்பாற்ற முன் வரவேண்டும். அந்தவகையில் அனைத்துவித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தெரிந்திருப்பது அவசியம்.

தற்போது மோடி எடுத்துள்ள அனைத்து நடவடிக்கைகளும் பொதுமக்களுக்கு வரப்பிரசாதமாக உள்ளது. பாகிஸ்தான் நமக்கு எதிராக தாக்குதல் நடத்தியது தவறான ஒன்று அதற்காக பெரிய அளவில் போர் நடத்த தேவையில்லை. இந்த தாக்குதலால் உலகம் முழுவதும் பதற்றமான சூழல் நிலவி வருவதாக கூறியுள்ளார்.