தவெக மாநாட்டில் கழிவறை இடத்தில குடிநீர்.. ஏதும் சரியில்லை!! தொண்டர்கள் கடும் அதிருப்த்தி!!

0
123
TVK: Volunteers leaving the conference in droves!!
TVK: Volunteers leaving the conference in droves!!

TVK: தவெக மாநாட்டிற்கு போதுமான ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என தொண்டர்கள் வருத்தம்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடானது இன்று விக்கிரவாண்டியில் மதியம் மூன்று மணி அளவில் நடைபெற உள்ளது. முதலில் விஜய் அங்குள்ள நூறடி உயரம் கொண்ட கம்பத்தில் தவெக கொடியை ஏற்ற உள்ளார். இதற்கு முன்னதாகவே இந்த மாநாட்டிற்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் நேற்று இரவு முதல் வர தொடங்கினர்.

அனைத்து மாவட்டங்களிலிருந்தும் பல பேருந்துகள் தற்போது வரை வந்த வண்ணமாக உள்ளது. மேற்கொண்டு மாநாட்டிற்கு வரும் வாகனங்களிடம் கட்டாயம் டோல்கேட்டில் கட்டணம் வசூல் செய்யப்படாது என்றும் தவெக வினர் கூறியுள்ளனர். தொண்டர்களுக்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டாலும் அது ஏதும் சரிவர அமையவில்லை.

குறிப்பாக மதிய வெயிலில் தொண்டர்கள் உட்கார முடியாமல் நாற்காலிகளை தலைக்கு மேல் வைத்துள்ள நிலை உண்டாகியுள்ளது. அது மட்டுமின்றி அவர்கள் கொடுத்த தண்ணீர் பாட்டில்கள் ஏதும் போதாத காரணத்தினால் கழிவறைக்கு அருகில் தண்ணீர் வைக்கப்பட்டு பிடிக்கும் நிலையும் உண்டாகியுள்ளது. இதுகுறித்து விஜய், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு குழுவிடம் இவ்வாறு தொண்டர்களுக்கு போதுமான வசதியை சரிவர செய்யதாது குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தொண்டர்களுக்கு ஏற்றவாறு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்திருந்தால் சிறப்பாக அமைந்திருக்கும் அங்கு வந்த பலரும் எண்ணுகின்றனர்.

Previous articleதமிழக வெற்றிக் கழகத்தின் கொடி இருந்தால் போதும்!! சுங்கச்சாவடிகளில் அனுமதி இலவசம்!!
Next articleTVK: தவெக மாநாட்டை விட்டு கொத்து கொத்தாக வெளியேறும் தொண்டர்கள்!!