தமிழகத்தில் நோய்த்தொற்று பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்துவதற்கான எந்த ஒரு முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை என்று அரசின் மீது எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறது.அதோடு இந்த நோய்த்தொற்றின் தடுப்பூசிகளையும் வீணடித்து வருவதாக பல முக்கிய தலைவர்கள் கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள்.
ஆனால் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி செயல்பட்டுக் கொண்டிருந்த சமயத்தில் இது போன்ற குற்றச்சாட்டுகள் தமிழகத்தை பொறுத்த வரையில் எழவில்லை என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் அவருடைய செயல்பாடுகள் அனைத்தும் எல்லோராலும் கவனிக்கப்பட்டது. அதே வேளையில் எதிர்கட்சிகள் அவரை அப்போதும் விமர்சனம் செய்து கொண்டுதான் இருந்தார்கள் என்பது வேறு கதை.
ஆனால் தமிழகத்தில் தற்சமயம் உயிர்காக்கும் ஆக்சிசன் கையிருப்பில் இல்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகிறார்கள்.ஆனாலும் இது தொடர்பாக தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் தெரிவித்திருக்கின்ற தகவலின்படி தமிழ்நாட்டில் ஒரு நாளைக்கு 400 மெட்ரிக் டன் அளவிற்கு ஆக்சிசன் உற்பத்தி செய்யும் திறன் இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
தற்போது தமிழ்நாட்டில் மருத்துவ சிகிச்சை சார்ந்த தேவைகளுக்கு ஒரு நாளைக்கு 240 ரன்கள் மட்டுமே இந்த ஆக்சிசன் தேவைப்படுகிறது என்று தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் தெரிவித்திருக்கிறது. அதோடு இதற்கு தட்டுப்பாடு இருக்கின்ற அண்டை மாநிலங்களுக்கு தமிழகத்திலிருந்து தடையில்லாமல் ஆக்சிசன் அனுப்பிவைத்து கொண்டு இருக்கிறோம் என்று தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் தெரிவித்து இருக்கிறது.