கர்நாடகாவில் பாஜக ஆட்சி கிடையாது! காங்கிரஸ் தலைவர் சரத் பவார் பேட்டி.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் நடக்கவிருக்கும் கர்நாடக சட்டசபை தேர்தலில் பாஜக கட்சி வெற்றி பெறாது என்றும் கர்நாடகத்தில் பாஜக ஆட்சி நடக்கப்போவது இல்லை என்றும் கூறியுள்ளார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் அவர்கள் கர்நாடக மாநிலத்தில் நடக்கவிருக்கும் தேர்தலைப் பற்றி கருத்து தெரிவித்துள்ளார். தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் அவர்கள் சில தினங்களுக்கு முன்னர் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்து சில முக்கியத் தலைவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அந்த முடிவை சரத் பவார் வாபஸ் பெற்றார்.
இதையடுத்து கர்நாடக மாநிலத்தில் இன்னும் இரண்டு நாட்களில் சட்டசபை தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் கர்நாடகத்தில் காங்கிரஸ்தான் ஆட்சியை பிடிக்கும் என்று கூறியுள்ளார். இது குறித்து பேசிய தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், “கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி தான் ஆட்சியை பிடிக்கப் போகின்றது. இந்திய நாட்டில் 5 முதல் 6 மாநிலங்களில் மட்டுமே பாஜக நேரடியான ஆட்சியில் இருக்கின்றது. அடுத்த வருடம் நடக்கப் போகும் நாடாளுமன்ற தேர்தலை வைத்து இந்த தேர்தலில் பாஜக வெற்றி பெறும் என்று கணிக்க முடியாது” என்று தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் கூறியுள்ளார்.