இயக்குனர் சங்கர் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்தது முதல் பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். அது மட்டுமின்றி தமிழ் சினிமாவில் முக்கிய இடத்தையும் பெற்றுள்ளார். எந்திரன், சிவாஜி உள்ளிட்ட படங்கள் மூலம் ஒட்டுமொத்த உலகையும் திரும்பிப் பார்க்க வைக்க செய்தார் என்றே கூறலாம். அந்த அளவிற்கு சங்கர் என்றாலே பிரம்மாண்டம் தான். ஆனால் ரஜினி மற்றும் சங்கர் இணைப்பு சாதாரணமாக அமையவில்லை என ஏவிஎம் சரவணன் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
ஏனென்றால் அர்ஜுன் நடித்த முதல்வன் திரைப்படம் முதன்முதலாக ரஜினியை மையமாக வைத்த தான் சங்கர் எழுதினாராம். ஆனால் ரஜினியின் கால்ஷீட் கிடைக்காததால் அப்படம் கை நழுவி அர்ஜுனிடம் சென்றது. அந்த படமும் மாபெரும் ஹிட் அடித்தது. இதற்கு அடுத்தபடியாக ஏவிஎம் க் கு ரஜினியின் கால்ஷீட் கிடைக்கவே ஒரு படம் எடுக்கலாம் என்று திட்டமிட்டனர். குறிப்பாக இந்த படத்தை சங்கர் இயக்கினால் நன்றாக இருக்கும் என நினைத்த்துள்ளனர்.
இதனை ரஜினியிடம் தெரிவித்த பொழுது, நான் அவரின் படத்தை நிராகரித்து விட்டேன் தற்பொழுது என்னை வைத்து அவர் பாடம் எடுப்பாரா என்று கேள்வி கேட்டுள்ளார். ரஜினியே இவ்வாறு கேள்வி கேட்டு விட்டாரா என்று எண்ணி உடனடியாக சிவாஜியின் கதையை ரஜினியிடம் கூறியுள்ளார். அப்படித்தான் இவர்களின் மாபெரும் காம்போ அமைந்தது என்று ஏவிஎம் சரவணன் கூறினார். இருவரும் எந்த ஒரு மன கசப்பும் இல்லாமல் ஒன்று சேர்ந்த படத்தை கொண்டு சென்றதாகவும் அந்த பேட்டியில் தெரிவித்தார்.