ஜல்லிக்கட்டுக்கு தமிழக அரசின் சட்டம் ஏதும் தெளிவாக இல்லை! உச்சநீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!
பொங்கல் திருவிழாவை முன்னிட்டு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு நடக்கக்கூடாது என்று பீட்டா அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. அந்த வகையில் தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர் அவரது வாதங்களை தாக்கல் செய்தார். அதில், காளைகளை எந்த விதத்திலும் துன்புறுத்தவில்லை என்று தெரிவித்தார். மேலும் காளைகளின் இனத்தை பறைசாற்றும் வகையில் தான் இந்த விளையாட்டு நடைபெறுகிறது என்று கூறினார்.
இவ்வாறு இருக்கையில் ஜல்லிக்கட்டுவிற்கு தடை விதித்தால் காளை இனங்கள் அழிந்துவிடும் என்றும் தமிழ்நாடு சார்பாக வாதம் வைக்கப்பட்டது. இருவரின் வாதங்களை கேட்டறிந்த நீதிபதி பல கேள்விகளை தமிழக அரசுக்கு எதிராக எழுப்பியுள்ளார்.அதில் தமிழக அரசு ஜல்லிக்கட்டுக்காக தெரிவிக்கும் சட்டங்கள் ஏதும் தெளிவாக இல்லை என்று கூறியுள்ளனர்.
அந்த வகையில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ள பல சட்டங்கள் கேள்வி எழுப்பும் வகையில் அமைந்துள்ளது. எனவே தமிழக அரசு இந்த கேள்விகளுக்கு சரியான பதிலளிக்க வேண்டும். அதனால் வரும் ஆறாம் தேதி ஜல்லிக்கட்டு குறித்து விரிவான பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
ஜல்லிக்கட்டை எதிர்த்து பீட்டா உள்ளீட்டு அமைப்புகள் மனு தாக்கல் செய்த நிலையில் நீதிபதிகள் இவ்வாறு கூறியிருப்பது அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.மீண்டும் ஜல்லிக்கட்டு தடை கோரினால் மீண்டும் ஓர் எழுச்சி போராட்டம் நடக்க அதிகளவு வாய்ப்புள்ளது.