சேலத்தில் வங்கிகள் மூலமாக 2000 ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதற்கு எந்த வித சிரமமும் இல்லை-பொதுமக்கள் பேட்டி!

Photo of author

By Savitha

சேலத்தில் வங்கிகள் மூலமாக 2000 ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதற்கு எந்த வித சிரமமும் இல்லை சுலபமாக மாற்று செல்வதாக பொதுமக்கள் பேட்டி.

2000 ரூபாய் நோட்டுக்களை சட்டைப் பையில் வைத்து எடுத்து சென்றுவிடலாம் ஆனால் இப்போது பைகளில் எடுத்து செல்லும் நிலை உள்ளது.

நாடு முழுவதும் வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று பாரத ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. குறிப்பாக வங்கிகளில் இன்று முதல் 2000 ரூபாய் கொடுத்து பணத்தை மாற்றிக் கொள்ளலாம் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த நிலையில் சேலம் மாவட்டத்தில் 486 வங்கிகள் மூலம் பணத்தை மாற்றுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்கள் வங்கிகளுக்கு நேரடியாக வந்து ஒரு நாளைக்கு 20 ஆயிரம் வரை நோட்டுகளை கொடுத்து பணத்தை மாற்றி செல்கின்றனர்.இதற்கு எந்தவித ஆவணங்களும் செலுத்தப்பட தேவையில்லை இருபது ஆயிரத்திற்கு மேல் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றினால் அதற்கான ஆவணங்கள் வழங்க வங்கிகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில் இன்றைய தினம் முதல் நாள் என்பதால் பொதுமக்கள் குறைந்த அளவிலே 2000 ரூபாய் நோட்டுக்களை கொடுத்து மாற்றி சென்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில் எந்தவித சிரமமும் இன்றி 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றி செல்வதாகவும் எந்தவிதமான ஆவணங்களையும் வங்கிகளில் கேட்பதில்லை என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.

மேலும் 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறுவது தேவையற்ற வேலை என்றும் இதற்கு முன்பாக 2000 ரூபாய் நோட்டுகள் அறிவித்தபோது மக்கள் எந்த அளவிற்கு சிரமப்பட்டார்கள், ஆனால் மீண்டும் 2000 ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது வீண் சிரமத்தை ஏற்படுத்தி உள்ளதாக கூறுகின்றனர்.

மேலும் 2000 ரூபாய் நோட்டுகள் பயனுள்ளதாக இருந்தாலும், 2000 ரூபாய் நோட்டுக்களை சட்டைப் பையில் மடித்து வைத்து எடுத்து சென்று விடலாம் ஆனால் இப்போது பைகளில் எடுத்து செல்லும் நிலை உள்ளது இதனால் அச்சம் ஏற்படுவதாகவும் தெரிவித்தனர்.