ரத்தக்கண்ணீர் எம் ஆர் ராதா அவர்களின் மகனான ராதாரவி தன்னுடைய தந்தையின் அந்தஸ்தை வைத்து சினிமாவிற்கு வரவில்லை அதற்கு மாறாக எம் ஆர் ராதா அவர்களின் மகன் என்பதாலேயே ராதாரவிக்கு பெரிதளவு வாய்ப்பு கிடைக்கும் இல்லை. பொதுவாக குடும்பத்தில் ஒருவர் அல்லது தந்தை சினிமா துறையில் இருக்கிறார் என்றால் அவருடைய மகன் அல்லது மகள் சினிமாவில் நுழைவது எளிதான காரியம் என பலரும் நினைத்திருக்கும் தருணத்தில் தன்னுடைய சினிமா துறை வாழ்கையானது அவ்வாறு இல்லை என ராதாரவி அவர்கள் தெரிவித்திருக்கிறார்.
தனக்கு டி ராஜேந்திரன் அவர்கள் தான் கடவுள் போன்றவர் என்றும் அதற்கு காரணம் சினிமாவில் தான் வாய்ப்பு தேடி அலைந்தபொழுது அரை மணி நேரம் ஒரு மணி நேரம் என சின்ன சின்ன சீன்களில் மட்டுமே தன்னை நடிக்க பயன்படுத்தியதாகவும் முதல் முறையாக தன்னை நம்பி முக்கியமான கதாபாத்திரம் ஒன்றை கொடுத்து நடிக்க வைத்தவர் டி. ராஜேந்திரன் என்றும் அவரால்தான் தன்னுடைய சினிமா வாழ்க்கை துவங்கியது என்றும் பேட்டி ஒன்றில் நடிகர் ராதாரவி அவர்கள் தெரிவித்திருக்கிறார்.
தான் சினிமா துறையில் நுழைந்த பொழுது பல இன்னல்களை கடந்ததாகவும் அந்த இன்னல்களைக் கடந்த சினிமா துறையில் நுழைவதற்கும் தன்னுடைய திறமைகளை வெளிப்படுத்துவதற்கும் முக்கிய காரணமாக இருந்தவர் டி ராஜேந்திரன் அவர்கள் என்று தெரிவித்திருக்கிறார்.தனக்கு நெகட்டிவ் ரோல் கொடுக்கப்பட்டாலும் அதை தன்னுடைய நடையில் சிறப்பாக நடித்துக் கொடுப்பதில் வல்லவராக இவர் திகழ்ந்ததோடு மட்டுமல்லாது அவருடைய காலம் தொட்டு தற்பொழுது வரை பல படங்களில் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.