கூலி படத்தை தொடர்ந்து கைதி 2 கிடையாது!! லோகேஷ் கனகராஜ் அதிரடி முடிவு!!

Photo of author

By Gayathri

மாநகரம் படத்தின் மூலமாக தமிழ் சினிமா துறையில் இயக்குனராக அடி எடுத்து வைத்தவர் லோகேஷ் கனகராஜ். இவர், தொட்டதெல்லாம் போல் பொன்னாவது போல் இவர் எடுத்த படங்கள் எல்லாம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன.

நடித்தால் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என சினிமா துறையில் உள்ள பெரிய நடிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கும் அளவிற்கு இவருடைய படங்கள் அமைந்துள்ளன என்று கூறினால் அது மிகையாகாது.

இவருடைய இயக்கத்தில் மாஸ்டர், கைதி, விக்ரம், லியோ மற்றும் இதனை தொடர்ந்து தற்பொழுது கூலி திரைப்படம் இயக்கப்பட்டு வருகிறது. இத்திரைப்படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கொண்டு இயக்கப்படும் கூலி திரைப்படத்தின் முடித்தவுடன், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் கைதி மற்றும் விக்ரமின் அடுத்த இரண்டு பாகங்களை எடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட அந்த நிலையில் மற்றொரு தகவலும் வெளியாகி உள்ளது.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் மலையாள நடிகரான பகத் பாசில் உடன் இணைந்து படம் அமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

பகத் பாசிலிடம் ஒரு நேர்காணல் நடத்தப்பட்ட போது, வீடியோ கால் மூலம் பேசிய லோகேஷ் கனகராஜ், பகத் பாசிலுடன் விரைவில் கூட்டணி அமைக்க இருப்பதாக தெரிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.