ADMK BJP: தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலானது தொடங்குவதற்கு இன்னும் எட்டு மாதங்கள் உள்ள நிலையில் அதிமுக பாஜக மேலும் மாற்றுக் காட்சிகள் அனைவரும் தங்களது கூட்டணியை உறுதி செய்து வருகின்றனர். இது ரீதியாக ரகசிய பேச்சு வார்த்தையும் நடைபெறுகிறது. இந்நிலையில் அதிமுக பாஜக கூட்டணி வைத்தது குறித்து அது சார்ந்த அனைத்துக் கட்சிகளுக்கும் அதிருப்திதான். நாடாளுமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட அதிமுக, வரப்போகும் சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டால் பல்வேறு கூட்டணிகள் கைக்கூடும்.
ஆனால் பாஜகவை கூட்டணிக்குள் கொண்டு வந்ததால் மாற்றுக் கட்சியினர் அனைவரும் விலகவே நினைக்கின்றனர். அதுமட்டுமின்றி பாஜக வின் பெரும் தலைவர்கள் முதல் அனைவரும் கூட்டணி முறையில் தான் ஆட்சி செய்யப்படும் என கூறுகின்றனர். இதனை எடப்பாடி முழுவதுமாக மறுத்து, இரட்டை இலை தலைமையில் தான் ஆட்சி என்று அவர்களுக்கு எதிராகவே பேசுகிறார். இந்த பேச்சுவார்த்தையிலேயே தற்போது வரை சமரசம் எட்டப்படவில்லை.
இவ்வாறு இருக்கும் சூழலில், எடப்பாடி பாஜக கூட்டணியை உதறிவிட்டு மாற்றுக் கட்சியினருடன் கூட்டணி உறுதி செய்யலாம் என எண்ணுகிறாராம். அதேபோல கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஆடி திருவாதிரை விழாவில் கலந்து கொள்ள வந்த மோடியையும் திருச்சி விமான நிலையத்தில் வைத்து எடப்பாடி சந்தித்துள்ளார். அதிமுக பாஜக கூட்டணி உறுதிக்கு பிறகு தற்போது தான் முதல் முறையாக சந்திக்கிறார்களாம்.
அந்த வகையில் அவரிடம் பேசும் போது, இரட்டை இலை கட்சியின் கீழ் தான் பாஜக இருக்க வேண்டும் என கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் மோடி இது ரீதியாக வாய் திறக்கவில்லையாம். அதே சமயம் கூட்டணியில் ஒருபோதும் பன்னீர்செல்வம் இடம்பெற மாட்டார் என எடப்பாடி கூறுவதால், அவரையும் மோடி பார்க்க மறுத்து விட்டாராம். தமிழகத்தில் அதிமுகவை தவிர்த்து வேறு எந்த கூட்டணியும் பாஜகவுடன் இணைய தயாராக இல்லை. இதனை தக்க வைத்துக் கொள்ள வேண்டுமென்று மோடி எண்ணுவதாக கூறுகின்றனர்.