இந்திய அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாட நியூசிலாந்து இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்த போட்டி நாளை தொடங்க உள்ளது.
சமீபத்தில் அதற்கான இந்திய டெஸ்ட் அணி அறிவிக்கப்பட்டது. அதில் ரோஹித் ஷர்மா தலைமையில் துணை கேப்டன் ஜஸ்ப்றித் பும்ப்ரா,ஜெய்ஷ்வால், துருவ் ஜூரேல்,சர்ப்ராஸ் கான் ,விராட் கோலி ,ரிஷப் பண்ட் ,கே எல் ராகுல் ,சுப்மன் கில் , ரவிச்சந்திரன் அஸ்வின் , ரவீந்திரா ஜடேஜா , அக்சர் படேல் ,ஆகாஷ் தீப், குல்தீப் யாதவ் ,முகமது சிராஜ் போன்ற முன்னனி வீரர்கள் இடம்பெற்றிருந்தனர்.
வேகபந்து பந்துவீச்சாளர் முஹம்மது ஷமி காயம் காரணமாக நீண்ட நாட்களாக எந்த போட்டியிலும் பங்கேற்கவில்லை. ஆனால் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார் என எதிர் பார்க்க பட்ட நிலையில் அவர் நியூசிலாந்துக்கு எதிரான தொடரின் அணியில் இடம்பெறவில்லை.
இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிராக மேற்கொள்ளும் மூன்று போட்டிகளின் மைதானமும் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக உள்ளது என்பதால் வேக பந்து வீச்சாளரான முஹம்மது ஷமி அணியில் இடம்பெறவில்லை என கூறப்படுகிறது.
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா ஆட்ட மைதானங்கள் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக உள்ளதால் வலை பயிற்சியில் சுழற்பந்தை எதிர்கொள்வதை தீவிரமாக பயிற்சி செய்து வருகிறார் பங்களாதேஷ் டெஸ்ட் தொடரில் ஆட்டத்தின் வெற்றிக்கு ரோஹித் ஷர்மாவின் சதம் குறிப்பிடத்தக்கது.