அதிமுகவில் ஓபிஎஸ் அணியினருக்கு இடம் உண்டு, ஆனால் ஓபிஎஸ், டிடிவிக்கு இடம் இல்லை- இபிஎஸ்

0
426
#image_title

அதிமுகவில் ஓபிஎஸ் அணியினருக்கு இடம் உண்டு, ஆனால் ஓபிஎஸ், டிடிவிக்கு இடம் இல்லை- இபிஎஸ்

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது என்றும், அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரனுக்கு எப்போதும் இடம் இல்லை எனவும் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த, எடப்பாடி பழனிசாமி கூறினார்.

முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மகள் பிரியதர்ஷினி-முரளி உள்பட 51 ஜோடிகளுக்கு, மதுரை டி.குன்னத்தூரில் உள்ள ஜெயலலிதா கோவிலில் நேற்று திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தை அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார்.

அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் பொதுக்குழு நடைபெற்றது செல்லும், அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் செல்லும் என்று உச்சநீதிமன்றம் அர்புதமான தீர்ப்பை வழங்கியுள்ளது. இதன் மூலம் தர்மம், நீதி, உண்மை வென்றுள்ளது. ஓ.பன்னீர்செல்வத்துக்கு நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை. வழக்கில் தீர்ப்பு வந்துவிட்டது. அதனால் அவருக்கும், எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை

ஒரு சில நபர்களை தவிர இரட்டை இலை சின்னத்துக்கு வெற்றி கிடைக்காது என்று டி.டி.வி.தினகரன் கூறுவது வேடிக்கையாக இருக்கிறது. அவர் தனிக்கட்சி தொடங்கி விட்டார். எங்கள் கட்சியைப் பற்றி பேச அவருக்கு தகுதியும் இல்லை. தேவையும் இல்லை. ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் உள்ளவர்களை எங்களோடு இணைந்து செயல்பட ஏற்கனவே அழைப்பு விடுத்தோம்.

அதிமுகவுக்காக உழைத்தவர்கள், பாடுபட்டவர்கள் தாராளமாக வரலாம். ஒரு சில நபர்களைத் தவிர யார் வந்தாலும் அதிமுக வரவேற்கும் என இபிஎஸ் தெரிவித்தார். இதனையடுத்து ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் வந்தால் ஏற்று கொள்வீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு. அதுதான் இல்லை என்று ஆகி விட்டதே.

உச்சநீதிமன்றம் வரை கொண்டு போய் விட்டார்களே என இபிஎஸ் பதிலளித்தார். மேலும் உச்சநீதிமன்றத்தில் நடந்த வழக்கில் அ.தி.மு.க.விற்கு கிடைந்த இந்த வெற்றியானது, ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலிலும் எதிரொலிக்கும்

 

Previous articleஉங்க கிட்னிகளை கிளீன் பண்ணுங்க! எளிமையான முறையில்! 
Next articleஇல்லம் தேடி கல்வி மையம்; தனியார் நிறுவனத்துக்கு அனுமதி – கல்வித்துறை உத்தரவு