இல்ல இல்ல அவர்களுக்கு இப்போ ஊசி போட முடியாது! மத்திய அரசு திட்டவட்டம்!

Photo of author

By Sakthi

இந்தியா முழுவதும் நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்கு கடந்த வருடம் ஜனவரி மாதம் 16ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டது. இந்த பணிகள் ஆரம்பித்து ஒரு வருட காலம் முடிவடைந்த நிலையில், இதுவரையில் 158,4,41,770 தவளைகள் தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது.

இதற்கு நடுவில் 15 முதல் 18 வயது வரையிலான அவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது பணிகள் கடந்த 3ஆம் தேதி ஆரம்பித்து நடைபெற்று வருகிறது. இந்த பிரிவை சேர்ந்தவர்கள் 7,40,50,000பேர் இருக்கிறார்கள். இவர்களில் 3,59,30,929 பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு இருக்கிறது. 4 வாரங்களில் அவர்களுக்கு இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தப்பட இருக்கிறது.

இந்த சூழ்நிலையில், 12 வயது முதல் 14 வயது வரையிலான சிறுவர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்துவதற்கான பணிகள் வருகின்ற மார்ச் மாதம் நடைபெற வாய்ப்பு இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது.

இந்த தகவலை தடுப்பூசிகளை தேசிய தொழில்நுட்ப ஆலோசனை குழுவின் தலைவர் மருத்துவர் என்.கே. அரோரா கூறியிருக்கிறார். அவர் தெரிவிக்கும்போது 12 வயது முதல் 14 வயது வரையிலான சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான பணிகள் மார்ச் மாதம் ஆரம்பிக்க வாய்ப்பு இருக்கிறது.

அது தொடர்பான கொள்கை ரீதியிலான முடிவை அரசு முன்னெடுக்கும் அந்த வயது வரம்பில் சுமார் 7.5 கோடி சிறுவர்கள் இருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.

இந்த சூழ்நிலையில், இதில் 12 வயது முதல் 14 வயது வரையிலான சிறுவர்களுக்கு தற்போதைய நிலையில், நோய்தொற்று தடுப்பூசி போடும் எந்த விதமான திட்டமும் இல்லை. அது குறித்து அரசு இன்னும் முடிவு எடுக்கவில்லை என்று தெரியவந்திருக்கிறது.

மார்ச் மாதத்தில் 12 முதல் 14 வயது வரையிலான சிறுவர்களுக்கு தடுப்பு பணிகள் ஆரம்பமாகும் என்று தகவல் வெளியான சூழ்நிலையில், மத்திய அரசு அதனை முற்றிலுமாக மறுத்திருக்கிறது.